சொந்த தொழிலுக்காக கூகுள் வேலையை துறந்த பட்டதாரி !

மும்பையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான முனாப் கபாடியா, கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தனது தாயார் நபிசா செய்யும் உணவுப் பண்டங்களைக் கொண்டு உணவகம் ஒன்றைத் தொடங்க முனாப் திட்ட மிட்டுள்ளார்.
சொந்த தொழிலுக்காக கூகுள் வேலையை துறந்த பட்டதாரி !
தனது உணவகத்தில் முக்கியமாக விற்கப் போகும் உணவுகளை சோதிக்க வித்தியாசமான திட்டம் ஒன்றையும் முனாப் செயல் படுத்தி யுள்ளார்.

இதற்காக தனது நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் ஓரு நாள், முனாப் தனது வீட்டில் உணவு விருந்திற்க்கு அழைத்துள்ளார். 

அப்போது, அம்மா கையால் சமைத்த, விற்பதற்கு திட்ட மிட்டுள்ள உணவுகளை அனைவருக்கும் பரிமாறி ருசி எப்படி? என்று அறிந்திருக்கிறார்.

இதை அடுத்த கட்டத் திற்கு கொண்டு செல்ல, முன்பின் அறிமுகம் இல்லாத வர்களின் கருத்தை யும் அறிய, ஃபேஸ் புக்கில் வேர்ட் ஆஃப் மவுத் (Word of Mouth) 

என்ற பெயரில் தொடர்ந்து பதிவிட்டு, மகளிர் குழுவினர் சிலரை தன் வீட்டிற்கு அழைத்து மற்றொரு விருந்து வைத்துள்ளார்.பின்னர், போஹ்ரி கிட்சென் என்ற உணவகம் ஒன்றை மும்பையின் வார்லி பகுதியில் திறந்துள்ளார். 
எதிர் பார்த்ததைப் போலவே தனது உணவகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததும் முனாப், தனது கூகுள் பணியையும் துறந்து விட்டார்.

இதனை யடுத்து முழு வீச்சில் தனது உணவக வேலைகளை கவனிப்பதில் ஈடுபடத் தொடங்கி யுள்ளார். 

தனது வெற்றிக்குக் காரணமான தொழில் தந்திரத்தை வெளிப்படையாக சொல்லும் முனாப், தன் அம்மாவின் கையால் செய்த மட்டன் சமோசா விற்பதற் காகவே கூகுளில் பார்த்த வேலையை தூக்கி எறிந்து விட்டு வந்ததா கவும் கூறி யுள்ளார்.
Tags:
Privacy and cookie settings