ஜிஎஸ்டி சந்தேகம்.. கட்டணமில்லா தொலைபேசி !

ஜிஎஸ்டி தொடர்பாக வணிகர்களுக்கு எழும் சந்தேகங்களை 01204888999 மற்றும் 18001036751 ஆகிய கட்டண மில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள லாம் என தமிழக வணிக வரித்துறை அறிவித் துள்ளது.
ஜிஎஸ்டி சந்தேகம்.. கட்டணமில்லா தொலைபேசி !
இது தொடர்பாக தமிழக வணிக வரித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சனிக்கிழமை முதல் அமலாகிறது. 

தமிழக அரசின் வணிக வரிததுறை இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்த தயார் நிலையில் உள்ளது. 

இந்த வரி குறித்து வணிக ர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் நிதிய மைச்சர் டி.ஜெயக்குமார், வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கருத்த ரங்கம் கடந்த 28-ம் தேதி சென்னை யில் நடந்தது.

இதில் வணிகர்கள் கேள்விகள், சந்தேகங்களுக்கு துறை சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. 

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வரி விதிப்பு வட்டத்திலும், குறைந்த பட்சம் 2 கருத்தர ங்குகள் என 650 கருத்த ரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 
மேலும், மாவட்ட அளவிலும் வணிகர்கள் சந்தேகங்களை போக்க கருத்தர ங்குகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 

இவை தவிர, ஒவ்வொரு வணிக வரி வட்டத்திலும் உதவி மையம் (help desk), மாவட்ட அளவில் ஒருங் கிணைந்த உதவி மையமும் அமைக்கப் பட்டுள்ளது. 

இம்மை யங்களில், ஜிஎஸ்டி சட்டத்தில் உள்ள சந்தேகங் களை வணிகர்கள் நிவர்த்தி செய்ய லாம்.

மேலும், வணிகர் களுக்கு அவ்வ போது எழும் சந்தேக ங்களை உடனுக் குடன் நிவர்த்தி செய்ய ஜிஎஸ்டிஎன்-ல் நேரடியாக இணைக்கப் பட்ட 

கட்டணமில்லா தொலைபேசி 01204888999 மற்றும் வணிக வரித்துறையின் தொலைபேசி உதவி எண் 18001036751 ல் தொடர்பு கொள்ளலாம்.
வணிக வரித் துறையின் அனைத்து அலுவலர் களுக்கும் ஜிஎஸ்டி மற்றும் ஜிஎஸ்டிஎன் இணைய தள மென்பொருள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.  இப்பயிற் சியை தொடரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 

ஜிஎஸ்டி அமலாக் கத்தின் போது சுமூகமான முறையில் புதிய வரி முறைக்கு மாற ஒத்துழைப்பு அளிக்கும் படியும் வணிகர் களுக்கு உதவு மாறும் அலுவலர் களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தமிழக த்தில் தற்போது 6 லட்சத்து 50ஆயிரத் துக்கும் மேற் பட்ட பதிவு செய்த வணிகர் களில், 91 சதவீதம் பேர் ஜிஎஸ்டிஎன் இணயை தளத்தில் பதிவு மாற்றம் பெற விண்ணப் பித்துள் ளனர். 

அவர்களுக்கு தற்காலிக ஜிஎஸ்டிஐஎன் (புரொவிஷனல் ஐடி) வழங்கப் பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி 3 மாதங்கள் வரை தங்கு தடை யின்றி வணிகம் செய்யலாம். 
மேலும், மத்திய ஜிஎஸ்டி துறை மூலமாக விரிவான ஏற்பாடுகளும் மத்திய அரசால் செய்யப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings