விரைவாக மரம் வளர்க்க வேண்டுமா? அப்ப இதை படிங்க !

புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசை தான். 

விரைவாக மரம் வளர்க்க வேண்டுமா? அப்ப இதை படிங்க !

ஆனால் சிறிய மரக் கன்று களை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும் போது உள்ள சிரமங்கள் தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கி விடுகிறது. 

நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள்
ஆடு மாடுகள் மரக் கன்று களை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும். 

ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்து விடாமல் கம்புகளை நட்டு மரக்கன்று களைப் பாதுகாக்க வேண்டும். 

இப்படிப் பல வேலைகள் உள்ள தாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்படு கிறது.

மரம் வெட்டி நடுதல்

இந்தக் கஷ்டம் எதுவும் இல்லா மல் விரை வில் மரம் வளர்க்கக் கூடிய எளிதான முறை மரத்தை வெட்டி நடுதல் ஆகும். 

வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றியும் பெரும் பாலும் வேப்ப மரம் வளர்ப் பதையே அதிகம் விரும்பு வார்கள். 

வேப்ப மரம் குளுமை யான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ள தால் எல்லோ ராலும் பெரிதும் விரும்பப் படுகிறது. வெட்டி வைத்தால் நன்கு வளரக் கூடிய மரங்க ளுள் வேப்ப மரம் முதன்மை யானது.

மரம் நடும் காலம்

வேப்ப மரம் எல்லா காலங் களிலும் நன்கு வளரும் மரம் என் றாலும் வெட்டி மரம் நடுவ தற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக் காலத் திற்கு முந்தைய மாத மாகும். 


அதாவது ஜுலை ஆகஸ்ட் மாதங் களில் வெட்டி நடுவது சிறந்த தாகும். ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பி க்கும் போது 

செப்டம்பர் அக்டோபர் மாதங் களில் மழைக் காலம் தொடங்கு வதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச் சூழல் மரம் நன்கு வளர உதவும்.
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி
விவசாயப் பகுதிக ளிலும் தோட்டங் களிலும் வேப்ப மரங்கள் தானாய் அதிகம் வளரும் மரமாகும். இம்மரங் களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரை யுள்ள மரங் களைத் தேர்ந் தெடுத்துக் கொள்ள வேண்டும். 

நேராக ஒரு குறிப்பிட்ட உயரத் திற்கு மேல் வளர்ந் துள்ள மரங் களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். மரங் களை உடனடி யாக வெட்டி எடுக் காமல் முதலில் கிளை களை வெட்டி விட வேண்டும்.

பின்னர் மரத்தைச் சுற்றி குழியைத் தோண்டி ஆணி வேர் தவிர மற்ற வேர்களை அரிவா ளால் வெட்டி விட்ட பின் மண்ணைத் தள்ளி மூடி விட வேண்டும். 

ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ கழித்து மீண்டும் மண்ணைத் தோண்டி ஆணி வேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடி யாக நட வேண்டும். 

ஏற்கெனவே வெட்டி விட்ட இடங் களில் புதிய வேர்கள் வளர ஆரம்பித் திருக்கும். கிளை களும் துளிர் விட்டி ருக்கும். இதனால் மரங்கள் வைத்த உடனேயே முளைக்க ஆரம்பித்து விடும்.

மரம் நடும் இடத்தில் செய்ய வேண்டி யவை

மரம் நடும் இடத்தில் மூன்று அடி ஆழக் குழியை இரண்டு மூன்று நாட் களுக்கு முன்பு தோண்டி வைத்தி ருக்க வேண்டும். 

சிங்கங்களை பற்றிய அதிர்ச்சி தகவல்கள்
மரம் நடும் நாளில் குழிக்குள் முதலில் மாட்டுச் சாணம் போன்ற இயற்கை உரங் களைப் போட வேண்டும். 

பின்னர் களிமண் அல்லது செம்மண் கொஞ்சம் போட்டு நன்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பின் மரத்தை நட்டு குழியை மண் போட்டு மூட வேண்டும். 

மூடிய மண்ணை நன்கு இறுக காலால் மிதித்து விட வேண்டும். மண்ணை நன்கு இறுக மிதிப்ப தால் மரம் எந்த விதத்தி லும் ஆடாது. 

இப்படி நடும் மரங்களில நூற்று க்குத் தொண் ணூற்று ஒன்பது சதவீத மரங்கள் முளைத்து விடும்.

மரத்தின் விலை

மிகப் பெரிய வேப்ப மரத்தை வெட்டி நட்டால் கூட முளை க்கும். ஆனால் உறுதி யாய்ச் சொல்ல முடியாது. 
இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ் !
இரண்டு முதல் ஐந்து வருட வயதுள்ள வேப்ப மரங் களைத் தேர்ந் தெடுத்து வெட்டி நடும் போது அம்மர ங்கள் பட்டுப் போகாமல் நிச்சயம் வளரும். 

தோட்டங் களில் மொத்த மாக மரங் களை வாங்க முடியும். வேப்ப மரம் ஒன்று 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை கிடைக்கின்றன. 
விரைவாக மரம் வளர்க்க வேண்டுமா? அப்ப இதை படிங்க !

வீட்டு வேலை ஆரம்பி க்கும் போது மரத்தை வெட்டி நட்டால் வேலை முடிவ தற்குள் மரங்கள் நிழல் தரும் அளவிற்கு வளர்ந்து விடும். 

தண்டு தடிம னான மரங்களை நடுவ தால் ஆடு மாடு கடிக்கவோ காற்றில் முறிந்து விழவோ வாய்ப்பே இல்லை.

கிராமங் களில் அதிகம் நடை முறையில் உள்ள இம் முறையை நகரங் களிலும் பயன் படுத்தி உடனடிப் பலன் பெறலாம்.
Tags:
Privacy and cookie settings