என்னை திருமணம் செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் !

தன் மகளை திருமணம் செய்துக் கொள்ளும் ஆண் மகனுக்கு 1,164 கோடி சன்மானம் அளிக்க தயாராக இருக்கும் தொழிலதிபர். ஆனால், ஒரு நிபந்தனை!
என்னை திருமணம் செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் !
சில செய்திகள், சில அறிவிப்புகள் கேட்ட நொடியிலேயே நம்மை உலுக்கி எடுக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்று தான் இது. சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ.

இவர் ஹாங்காங் கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப் மெண்ட் மூலமாக பெரும் பணக்கார ராக திகழ்கிறார்.

நினைத் தால் எதையும் சாத்தித்து காட்டும் அளவிற்கு பணம் இருக்கும் இவரால் ஒன்று மட்டும் முடிய வில்லை. இவரது ஒரே மகள் ஓரினச் சேர்க்கை யாளர்.

இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியோ அவருக்கு தான் தலைப்பில் கூறியி ருக்கும்

பரிசு தொகை போய் சேரும் 2012-ல் தான் முதல் முறையாக செசில் சாவோ உலகை உலுக்கும் அளவிற்கு ஒரு தலைப்பு செய்தியை உருவாக் கினார்.

அப்போது இவர் தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார்.

இந்த 60 மில்லியன் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே போனது. 2014-ல் 120 மில்லியன் டாலர்கள் ஆனது, இப்போது கடைசியாக 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. 
அதாவது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 1,164 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும். செசில் சாவோவின் லெஸ்பியன் மகளான கிகி தனது தந்தை அறிவிக்கும் சலுகை மற்றும் சன்மானம் போன்ற வற்றை மறுத்து வருகிறார். 

அவர் தனது லெஸ்பியன் துணை யுடனே வாழ விரும்புகிறார். பொது வெளியில் கிகி தனது தந்தை செசில் சாவோ விற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் செசில் 

சாவோ தன்னையும், தனது துணை சீன யேவ்யும் சாதாரணமான, கண்ணிய மான மனிதர்களாக பார்க்க வேண்டினார். உங்கள் மகளாக உங்களை மகிழ்விக்கவே நான் விரும்புகிறேன். 

ஆனால், உறவு என வரும் போது, உங்கள் எதிர் பார்ப்பில் நானும், ரியாலிட்டியில் நானும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போக முடியாது என மேலும் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

ஒரு பேட்டியில், தனது மகளின் முடிவில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், அவளை மதிக்க வேண்டும். 

தனது தந்தையின் இந்த மாற்றம் கிகிக்கு பெருமூச்சு விடும் நிலையாகவும், ஒரு பெரிய இடரில் இருந்து தப்பித்தது போலவும் இருக் கிறது.

தன் மகளை மதிக்கிறேன் என்று தான் செசில் சாவோ கூறினாரே தவிர, அவரது துணையை குடும்ப த்தில் சேர்த்துக் கொள்ள அல்ல. ஆம், கிகி மற்றும் செசில் சாவோ பிரிந்து வாழ்ந்து வருகி ன்றனர்.

தந்தையின் இந்த முடிவால், கிகிக்கு எந்த வருத்தமும் இல்லை. அவரது தொல்லை விட்டது போதும் என்று வாழ்ந்து வருகிறார். தனது துணை யுடன் நிம்மதி யாக தனது வாழ்க்கை பயணத் தில் பயணம் செய்து வருகிறார் கிகி.

இதுவும் காதல் தான்!
என்னை திருமணம் செய்தால் கோடியில் பணம் கிடைக்கும் !
ஓரினச் சேர்க்கை யாளர்கள் என்ற போதிலும், இவர்கள் இருவர் மீது வைத்திருந்த காதல், கோடிகளை வென்று, அன்பும், நிம்மதியும் மட்டுமே போதும் என்பதை போதிக்கிறது.

எது எப்படியோ, இதுவும் காதலுக்கு, காதலற்கு ஒரு வகையான எடுத்துக் காட்டு தான். பணத்தை வெல்ல மனதால் முடியும் என நிரூபிக்கும் எடுத்துக் காட்டு.
Tags:
Privacy and cookie settings