அடல் ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண் ணெய்க்கான அரசின் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும் போது, ''மண்ணெ ண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டு மெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும்.
எனவே ஆதார் அடையாள அட்டை இல்லா வர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ண ப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் மண்ணெ ண்ணெய் மானியம் பெற முடியும். அடல் ஓய்வூதிய திட்ட த்தை பெற வேண்டு மெனில் ஜூன் 15-ம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையை பெற வேண்டும்'' என்றார்.
அதே சமயம் ஆதார் அடையாள அட்டை வரும் வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,
விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப் பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர்
அல்லது அரசு உயரதி காரியிடம் பெற்ற அடையாள சான்றிழ் களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன் களை பெற்றுக் கொள்ள லாம் என்றும் தெரிவிக் கப்பட்டு ள்ளது.
மண்ணெ ண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாய மாக்கப் பட்டுள்ள தாக மத்திய அரசு வட்டார ங்கள் தெரிவிக் கின்றன.