டோணியின் வியூகம் செயல் படுத்தாத கோஹ்லி !

2007ம் ஆண்டு ஐசிசி டி20 பைனலில் கேப்டன் என்ற வகையில், டோணி செய்த மேஜிக்கை, 10 வருடம் கழித்து இன்று நடை பெற்ற சாம்பி யன்ஸ் டிராபி பைனலில் செய்ய தவறி விட்டார் கோஹ்லி. 

டோணியின் வியூகம் செயல் படுத்தாத கோஹ்லி !
அது முதல் டி20 உலக கோப்பை தொடர். அதன் பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோதல். மொத்த உலகமும் உற்று பார்த்தது. முதலில் பேட் செய்த இந்தியா சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரன் குவிக்க வில்லை. 

20 ஓவர் களில் 5 விக்கெட் டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் தான் எடுத்தி ருந்தது இந்தியா. 120 பந்துகளில் 158 ரன்கள் என்ற ஓரளவுக்கு எளிய இலக்கோடு தான் களமிறங் கியது பாகிஸ்தான்.

டோணி வியூகங்கள்

ஆனால், இந்திய கேப்டன் டோணி, பாகிஸ்தானு க்கான பாதையை எளிதாக்க வில்லை. கற்றுக் கொண்ட வித்தைகள் அத்தனை யையும் இறக்கினார் டோணி. 
 
கைக்கு எட்டும் தூரத்தில் ஸ்கோர் இருந்த போதும், களத்தில் உலகின் தலை சிறந்த பேட்ஸ் மேன்களில் ஒருவரான மிஸ்பா உல்ஹக் நின்ற போதிலும், கலங்கவில்லை டோணி. வியூகத்தை மாற்றினார். புதுமுகம் ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தார்.

வெற்றி

ரசிகர்க ளுக்கு மட்டு மல்ல எதிரணியி னருக்குமே இது சர்ப்ரைஸ் தான். பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டாக மிஸ்பா உல்ஹக்கை வீழ்த் தியது அதே ஜோகிந்தர் ஷர்மா தான். 

டோணியின் வியூகம் செயல் படுத்தாத கோஹ்லி !
ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தார். 152 ரன்களில் ஆல்அ வுட்டானது பாகிஸ்தான். டோணி யின் வியூகம் உலகமெங்கும் பாராட்டப் பட்டது.

கோஹ்லி வியூகம்

இன்றும் 10 வருடங் களுக்கு பிறகு அப்படியொரு பைனல். இம்முறை பேட்டிங் கில் சாதித் திருக்க வேண்டும் இந்தியா. ஆனால் பேட் செய்த போது எந்த வியூக த்தையும் செயல்படுத்த வில்லை கோஹ்லி. பேட்டிங் ஆர்டரை கூட மாற்றி எதிரணியை குழப்ப வில்லை. 

விக்கெட் டுகள் விழுந்து கொண்டே இருந்தன, பேட்ஸ் மேன்கள் கம்ப்யூ ட்டரில் புரோக்ராம் செய்ததை போல அதே ஆர்டரில் களமி றங்கினர்.

சாதனை

இத்தனை க்கும் ஓவல் போன்ற பேட்டிங் சாதக மான பிட்சில் இது ஒன்றும் எட்ட  முடியாத ஸ்கோர் இல்லை. ஆஸ்திரேலி யாவுக்கு எதிராக ஜெய்ப்பூ ரில் இதை விட பெரிய ஸ்கோரை விரட்டி  பிடித்தி ருந்தது இந்தியா. 

நாட்வெஸ்ட் சீரிஸ் பைனலில் இங்கி லாந்தை இதே போன்ற பெரிய ஸ்கோர் மேட்ச் ஒன்றில்,  லண்டனில் வைத்து, யுவராஜ் - முகமது கைப் ஜோடி, கங்குலி தலைமை யில் வீழ்த் தியது.

இது தான் வியூகம் ஆனால் இன்றோ, பேட்டிங் கிற்கான எந்த வியூகமும் கோஹ்லி யிடம் இல்லை. 

வெற்றி பெற்றால் ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிடுவது தான் கோஹ்லியிடம் உள்ள ஒரே வியூகம் என சில ரசிகர்கள் செய்யும் கேலி உண்மை என்றாகி விட்டது கோஹ்லியிடம்.
Tags:
Privacy and cookie settings