ஆம்புலன் சுக்கு டீசல் போட பணம் கொடுக்காததால், சிறுமி ஒருவரின் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
கௌசாம்பி மாவட்டம் மாலக் சத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவரின் மகள் பூனம், உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த சனிக் கிழமை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தார்.
உறவினர் ஒருவரிடம் பணம் வாங்கு வதற்காக ஆனந்த் குமார் அலகாபாத் செல்ல வேண்டி யிருந்தது. சிறுமியின் தாய் மாமா பிரிஜ் மோகன் என்ப வரிடம் மகளைப் பார்த்துக் கொள் என்று கூறிவிட்டு, ஆனந்த் குமார் அலகாபாத் சென்றிருக்கிறார்.
இதனி டையே, சிகிச்சை பலனளி க்காமல் சிறுமி நேற்று இறந்து போனார். சிறுமியின் சடல த்தைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, ஆம்பு லன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு மருத்து வர்களிட த்தில் மோகன் கேட் டுள்ளார்.
'டீசலுக்குப் பணம் கொடுத் தால் மட்டுமே ஆம்புலன்ஸ் அனுப்ப முடியும் ' என மருத்து வர்கள் கூறி விட்டனர். மோகனிடமோ பணம் இல்லை.
தொடர்ந்து, மருமகள் பூனத்தின் உடலைத் தோளில் சுமந்த வாரே 10 கிலோ மீட்டர் தொலை வுள்ள சொந்தக் கிராமத் துக்கு மோகன் சைக் கிளில் சென்று ள்ளார்.
சிறுமி யின் சடலத்தை மோகன் சைக்கி ளில் கொண்டு செல்வது போன்ற புகைப் படம் இன்று பத்திரிகை களில் வெளி யாகி, அதிர்ச் சியை ஏற்படுத் தியிருக் கிறது.
கௌசாம்பி மாவட்ட ஆட்சியர், மணீஷ் குமார் வெர்மா, பணியி லிருந்த மருத்து வர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டுள்ளார்.