பாலுக் கும் தண்ணீ ருக்கும் உள்ள பந்தத்தை விட நெருக்க மாக இருக்கிறது, பாலும்... அண்மைய சர்ச்சை களும். தரமற்ற பால், பாலில் கலப்படம் என்று பால் குறித்து
உலாவும் சர்சைகள் அனை த்தும் நம் மூளையில் இருக்கும் அமிக்டாலா வுக்கு அதிகம் வேலை வைப்ப தாக இருக்கிறது.
உண்மை யில், நம்மூர் பால் தரமற்றதா... அமைச்சர், தம்குடிகள் மீது உள்ள அக்கறையில் தான் பாலில் கலப்படம் என்கிறாரா என்று தெளி வாகத் தெரிய வில்லை.
ஆனால், கொஞ்சம் நுணுக்க மாகக் கவனித் தால், பாலில் ஆடை யாகப் படர்ந்தி ருக்கும் சர்வதேச அரசியல் தெரிகிறது.
அந்த அரசியல் நம் உள்ளூர் பால் விற்பனை யாளர்களை யும், விவசாயி களையும் காவு வாங்க வன்மத் துடன் காத்தி ருப்பது தெரிகிறது.
பாலில் படர்ந் திருக்கும் அரசியல் இது தான்:
RCEP பிராந்திய விரிவான பொருளா தார ஒத்துழைப்புக் கான (Regional Comprehensive Economic Partnership) தாராள வணிக ஒப்பந்த த்துக்கான பேச்சு வார்த்தை
ஆசியான் நாடுக ளிடையே (புர்னே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) நடந்து வருகிறது.
இந்த ஒப்பந்த த்தில் ஆசியான் நாடுகள் தவிர்த்து ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இருக்கி ன்றன.
அதாவது, உலக மக்கள் தொகையில் 50 சதவிகித த்தை நிரப்பும் நாடுகள் மற்றும் உலக உள்நாட்டு உற்பத்தி யில் 29 சதவிகிதம்
பங்களி க்கும் நாடுகள் வளர்ச்சிக் கான கூட்டுத் தாராள மய பொருளா தாரப் பேச்சு வார்த்தை யில் இறங்கி இருக் கின்றன.
தாராள மயம், கூட்டுப் பொருளா தாரம், வளர்ச்சி என வார்த் தைகள் வசீகரித் தாலும், அங்கு விவாதிக் கப்படும் விஷயங்கள் எதுவும் நம் எளிய விவசாயி களுக்கும், நமக்கும் நன்மை பயப்ப தாகத் தெரிய வில்லை.
ஆம், இந்தத் தாராள வணிக ஒப்பந் தத்துக் கான பேச்சு வார்த்தை என்பது சந்தையை எந்த அளவுக்குத் திறந்து விடுவது என்பதைச் சுற்றியே சுழல்கிறது.
அதாவது, இந்த ஒப்பந்தம் செயல் வடிவம் பெறும் பட்சத்தில், இறக்கு மதிக்கான வரி பெரும் அளவில் தளர்த்த ப்படும்.
அந்நிய நேரடி முதலீட்டைக் கண் காணித்து வரும் ஓர் அமைப்பு, இந்த ஒப்பந் தங்கள் கையெழுத் தாகும் பட்சத்தில் இறக்குமதி வரி 0 - 3 சதவிகிதம் வரை குறையும் என்கிறது.
குறிப்பாக, பால் மீதான வரி முற்றாகக் குறைக்கப் பட்டுப் பெருமளவில் இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
இந்த ஒப்பந்தத் துக்கான பேச்சு வார்த்தை யில் இருக்கும் நியூசிலாந்து தேசம் உலக அளவில் பால் உற்பத்தி யில் முன்னிலை வகிக்கிறது.
அது, தன் தேசத்தின் பால் பொருள் களை இந்தியாவு க்கு மற்றும் பேச்சு வார்த்தை யில் ஈடு பட்டுள்ள பிற தேசங்க ளுக்குத் தங்குத் தடையின்றி ஏற்றுமதி செய்யத் திட்ட மிடுகிறது.
பால் சர்ச்சையும்... சர்வதேச ஒப்பந்தமும்:
பால் அரசியல் சரி... அதற்கும் பால் குறித்த இப்போதைய சர்ச்சை களுக்கும் என்ன சம்பந்தம்...? இருக்கிறது... நெருக்க மான சம்பந்தம் இருக்கிறது.
ஏற்கெனவே, நம் தேசம் பால் உற்பத்தி யில் தன்னிறவை அடைந்த தேசம். ஒரு பொருள் உள் நாட்டிலேயே அபரி விதமாக உற்பத்தி யாகும் போது, அதே பொருளை வெளியி லிருந்து ஒருவர் வந்து விற்க வேண்டு மென்றால்,
முதலில் உள் நாட்டில் உற்பத்தி யாகும் அந்தப் பொருள் குறித்து ஒரு தவறான பிம்பத்தைக் கட்ட மைக்க வேண்டும். அந்தப் பொருள் உடல் நலத்துக்குத் தீங்கு விளை விக்க வல்லது,
தரமற்றது என்ற புனைவு களைப் புனைந்து அந்தச் சந்தை யில் சேதம் உண்டாக்க வேண்டும். அப்போது தான், அந்தச் சந்தையைக் கைப்பற்ற முடியும். இது வரலாறு நமக்குக் கற்றுக் கொடுத் திருக்கும் பாடம்.
இதைப் புரிந்து கொள்ள நீங்கள் வெளியிலி ருந்தெல்லாம் தரவுகள் தேட வேண்டாம். பால் சந்தையை கொஞ்சம் ஊன்றிக் கவனித் தாலே போதும். ஆம், முதலில் பால் சந்தை நம் எளிய விவசாயி களின் கைகளில் இருந்தது.
அவர்கள் இரண்டு மூன்று மாடுகளை வைத்துக் கொண்டு நான்கு தெருக்கள் வட்டத்தில் உள்ள நுகர்வோர் களுக்குப் பால் விற்றுக் கொண்டு இருந் தார்கள்.
இதனால் உள்ளூர்ப் பொருளா தாரமும் வலுவாக இருந்தது. இந்தப் பெரும் சந்தையைக் கைப்பற்றத் துடித்த பெரும் நிறுவ னங்கள்...
அந்தப் பால் ஆரோக்கி யமற்றது, அசுத்த மானது என்று அவதூறு களைப் பரப்பி, பால் உற்பத்தி மற்றும் சொந்தமாக வணிகம் செய்து கொண்டு செழுமை யாக வாழ்ந்து கொண்டு இருந்த விவசாயி களை,
தங்களு க்குப் பால் விற்பனை செய்யும் ஏஜென்டு களாக மாற்றின. பால் சந்தையை முழுவது மாகக் கைப்பற்றின.
இப்போது அதே யுக்தியைப் பயன் படுத்தி அந்தச் சந்தையை வெளி நாடுகள் கைப்பற்றப் போகின்றன.
பால் சந்தையை இந்திய நிறுவ னங்கள் கைப்பற்றி யதிலும் தகிடு தத்தங்கள் இருந் தாலும், இந்தியப் பெரும் முதலாளிகள், கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்து...
இந்திய விவசாயி களிடமிருந்து தான் பாலைக் கொள்முதல் செய்தார்கள். ஆனால், இந்த ஒப்பந்தம் நிறை வேறியபின் நியூசிலாந்து கோ-க்களின் பால் இந்தியச் சந்தையில் ஓடும்.
இந்த ஒப்பந் தத்தின் விளைவு களைச் சரியாகக் கணித்த அரசு, கேரள அரசு மட்டும் தான். அண்மையில், கேரள பால்வளத் துறை அமைச்சர் கே.ராஜு, ''இந்த ஒப்பந்த த்தில் உள்நாட்டுப் பால் உற்பத் தியும்,
அதைச் சார்ந்த பொருளா தாரமும் முடங்கும்'' என எச்சரித்தி ருக்கிறார். கேரள அரசாங் கமும் இந்த ஒப்பந்த த்துக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்தி ருக்கிறது.
தேவை... அண்மைப் பொருளா தாரம்!
அனந்து அப்படி யானால், பாலில் கலப்படம் இல்லை என்கி றீர்களா.. இந்தியச் சந்தை யில் ஓடும் பால் அனைத்தும் ரசாயனம் கலக்காததா...?
நிச்சயம் அனைத்தும் தரமானது என்றும் ரசாயனம் கலக்காதது என்றும் சொல்லி விட முடியாது. பதப்படுத்தப் பட்ட அனைத்து விஷயங் களிலும் ரசாயனம் இருக்கிறது.
பாலில் யூரியா வரை கலக்கப் படுகிறது என்கி றார்கள் வேளாண் செயற் பாட்டாளர் கள். ஆனால், அதற்காக இன்னொரு தேசத்தி லிருந்து வரும் பால் மட்டும் ஆரோக்கி யமானது என்று எப்படிச் சொல்ல முடியும்?
இதற்கு என்ன தான் தீர்வு?
எளிமை யான தீர்வை முன் வைக்கிறார் வேளாண் செயற் பாட்டாளர் அனந்து. அவர் முன் வைப்பது அண்மைய பொருளா தாரம் என்னும் தத்துவ த்தை. அவர் சொல்கிறார்,
“நம்முடன் எந்த உணர்வு பிணைப்பும் இல்லாமல் வெளியி லிருந்து வரும் எந்தப் பொரு ளிலும் கலப்படம் இருக்கும்... தரமற்ற வையாக இருக்கும். இதிலி ருந்து நாம் மீள வேண்டும்.
ஆரோக்கி யமான உணவைத் தான் உண்ண வேண்டும், பருக வேண்டும் என்று விரும்பு வோமானால்... அண்மைய பொருளா தாரத்தை ஊக்கு வியுங்கள். உங்கள் பகுதி களில் விளையும், உற்பத்தி ஆகும் பொருள் களை வாங்குங்கள்.
விவசாயி களிடம், சிறு வணிகர் களிடம் ஒரு பந்தத்தை வளர்த்துக் கொள்ளு ங்கள். இதனால் உள்ளூர்ப் பொருளா தாரமும் வளரும்... நுகர் வோருக் கும் தரமானப் பொருள்கள் கிடைக்கும்” என்கிறார்.
கேரள அரசாங்கம் எச்சரி க்கிறது... வேளாண் செயற் பாட்டா ளர்கள் மாற்றுப் பொருளா தாரத்தை முன் வைக்கி றார்கள்.
ஆனால், நம் அரசாங்கம், நமக்கான தமிழக அரசாங்கம்... இது குறித்த எந்தத் தெளிவும் இல்லாமல் இன்னும் கூவத்தூர் மயக்கத் திலேயே முடை நாற்றம் அடிக்கும் அரசியல் செய்து கொண்டிரு க்கிறது!