ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. தினகரன் குடும்பத் தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தால்
இரு அணி களையும் இணைப்பது தொடர் பாக பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று ஓபிஎஸ் கூறி யிருந்தார்.
அதை முதல்வர் மற்றும் அமைச் சர்கள் ஏற்றுக் கொள்வதா கவும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவ தற்கான குழு அமைக் கப்படும் என்றும் அறிவித் தனர்.
இதற்கு டிடிவி தினகரன் ஆதரவா ளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு ஆதரவாக வெற்றிவேல், தங்கத் தமிழ் செல்வன் உள்ளிட்ட 7 பேர் நேற்று நள்ளிரவு,
அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித் தனர்.
இன்று காலை டிடிவி தினகரன் வீட்டிற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தலைமை கழக பேச்சாளர்
நாஞ்சில் சம்பத் ஆகியோர் வந்து ஆலோசனை நடத்தினர். அரை மணி நேர ஆலோ சனைக்குப் பின் அவர்கள் அங்கிருந்து புறப் பட்டனர்.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நிருபர் களிடம் கூறிய தாவது:
ஒரு அசாதாரண சூழல் கட்சியில் உருவாகி உள்ளது. இது போன்ற ஆபத்து களையும், சவால் களையும் கடந்து தான் ஒரு தலைமை தன்னை நிலை நிறுத்த முடியும்.
இன்று கூடும் மாவட்ட செயலா ளர்கள், முக்கிய நிர்வாகி கள், எம்எல்ஏக் கள் கூட்டத்தில், டிடிவி தினகரன் நல்ல முடிவை அறிவிப்பார்.
இது போன்ற முடிவு எடுப்ப தற்கு அமைச் சர்கள் தூண்டப் பட்டுள் ளனர். அது போல அழுத்தம் கொடுத்தது பிஜேபி தான். ஆட்சியை கவிழ்த்து விடுவ தாக
தமிழக பாஜக தலைவர் தமிழிசை எனது நண்பர் ஒருவரிடம் பந்தயம் கட்டி யுள்ளார். அவர்கள் ஐடி ரெய்டை முதலில் கேடயமாக பயன் படுத்தி னார்கள்.
தேர்தல் ஆணை யத்தை இப்போது பாஜக பயன் படுத்துவது நாகரீக மான செயல் அல்ல. அனைத்து எம்எல்ஏக் களும் டிடிவி தினகரன் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவரின் தலைமையை சீர் குலைக்க சிலர் திட்ட மிட்டுள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அல்லி குளம் நீதிமன்ற த்தில் ஆஜராவதற்காக காலை 9.45 மணிக்கு அடையாறில் உள்ள அவரின் வீட்டில் இருந்து கிளம்பினார்.
அப்போது நிருபர் களிடம் அவர் கூறுகையில், எல்லா எம்எல்ஏக் களும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். அதிமுக வில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. கட்சியில் நாங்கள் பெரும் பான்மை யோடு இருக் கிறோம் என்றார்.