கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது: ஜிஎஸ்டி... தமிழக அரசு !

ஜிஎஸ்டியை காரணம் காட்டி கூடுதல் தொகை வசூலிக்ககூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவு றுத்தியுள்ளது.
கூடுதல் தொகை வசூலிக்கக் கூடாது: ஜிஎஸ்டி... தமிழக அரசு !

இது தொடர் பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 1, 2017-க்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக பதிவு செய்து 


மற்றும் அதற்காக ஒரு பகுதி பணம் செலுத்திய நுகர்வோர்களை ஜூலை 1, 2017-க்கு முன்பு முழுத் தொகையினையும் செலுத்து மாறு கட்டாயப் படுத்துவதாக மாநிலங் களுக்கும், 

கலால் மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியத் திற்கும் பல்வேறு புகார்கள் பெறப்பட் டுள்ளது.

மேற் காணும் நடவடிக்கைகள் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்துக்கு எதிரானது. மத்திய வருவாய் துறை யானது குடியி ருப்புகள், வளாகங்கள் மற்றும் கட்டடங்களுக்கான கட்டுமான செலவு சரக்கு 

மற்றும் சேவை வரி அமலாக்கத்திற்குப் பின் கணிசமாக குறையும் என்றும் அவ்வரியானது தற்போதுள்ள மத்திய 

மற்றும் மாநிலங்களால் விதிக்கப்படும் பல்வேறு மறை முக வரிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறை வானது என்றும் தெரிவித் துள்ளது.


தற்போதுள்ள வரி நடைமுறைகளில் சேவை வரிக்கான உள்ளீட்டு வரி வைப்பீடு செலுத்து வதற்கான வழி வகையில்லை. 

தற்போ துள்ள வரி நடை முறைக ளில் மத்திய கலால் வரி, மதிப்பு கூட்டுவரி, நுழைவுவரி முதலியன கட்டுமானப் பொருட்களுக்கு விதிக்கப் பட்டு ள்ளது. 

அவ்வரிகள் மேம் பாட்டாளர் களால் செலுத்தப் பட்டு, நுகர்வோர் குடியிருப் புக்காக செலுத்தும் இறுதி விலை யில் அச்செல வினங்கள் ஏற்றப் படுகிறது.

நுகர்வோர் களுக்கும் தாம் குடியிருப்புக்காக செலுத்தும் இறுதி விலையில் அச்செலவினங்கள் சேர்க்கப்படுவது வெளிப் படையாக புலப்படாது. 

மேலும், நுகர் வோருக்கு குடியிருப் பிற்கான விலை யில் ஏற்றப் படும் மறை முக வரிகள் மற்றும் உள்ளீட்டு வரிகள் முதலியன தெரிவ தில்லை. 

மத்திய வருவாய் துறை மேற்கண்ட சூழல், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக் கத்திற்குப் பின் மாற்றத் தினை காணும் என்று தெரிவித் துள்ளது. 


முழுமை யான உள்ளீட்டு வரி வைப்பீடு வசதியின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியி னால் விதிக்கப் படும் 12 சதவீத வரி யானது ஈடு செய்யப் படும். 

இதன் மூலம் உள்ளீட்டு பொருட் களுக்கான வரி குடியிருப் புகளுக் கான இறுதி விலை யில் இணைக்கப் படாது.

உள்ளீட்டு வரி வைப்பீடு வசதி யின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரியி னால் விதிக்கப் படும் 12 சதவீத வரி யானது ஈடு செய்யப் படும். 

இந்த காரணத் தினால் மேம்பாட் டாளருக்கு உள்ளீட்டு வரி வைப்பீடு தொகை திரும்ப செலுத்தும் வசதி தடைசெய்யப் பட்டுள்ளது.

மேம்பாட் டாளர்கள் சரக்கு மற்றும் சேவை வரியி னால் ஏற்படும் குறைந்த வரிச் சுமை பயனால் குறைந்த விலை மற்றும் தவணை யில் குடியிருப் புகளை நுகர் வோர் பெற வழி ஏற்படும். 


இந்திய கட்டு மானோர் சங்கம் மற்றும் கட்டிட, மனை மேம் பாட்டாளர் சங்க கூட்ட மைப்பு (கிரடாய்) ஆகி யோரை வாடிக்கை யாளர்களி டமிருந்து எந்த ஒரு மேம் பாட்டாளர் / கட்டு மான நிறுவ னமும் சரக்கு 

மற்றும் சேவை வரியினை அமல் படுத்துவ தால் அவர்கள் செலுத் தும் தவணை களுக்கு அதிக வரி செலுத்த வேண்டும் என்று கூறி 

பணம் வசூலி க்கக் கூடாது என்று அறிவுறுத் தப்பட்டுள் ளார்கள்'' என்று தெரிவிக் கப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings