கால்களைக் காட்டி பதிலடி... பிரியங்கா !

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் போது, கால்கள் தெரியும் விதமாக உடை அணிந்த தால் வசை பாடப்பட்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 
கால்களைக் காட்டி பதிலடி... பிரியங்கா !
மீண்டும் கால்கள் தெரியும் விதமான ஒரு புகைப்ப டத்தைப் பகிர்ந்து தன்னை வசை பாடியவர் களுக்கு பதிலடி தந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா நடிப்பில் 'பே வாட்ச்' ஹாலிவுட் திரைப் படம் இந்த வாரம் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாக வுள்ளது. 

இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி களுக்காக சோப்ரா ஜெர்மனி சென் றுள்ளார். அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சுற்றுப் பயணம் செய்து கொண்டி ருப்பது தெரிந்து, அவரை நேரில் சென்று சந்தித்தார்.

சோப்ரா பிரதமரை சந்தித்த புகைப் படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. அதில் பிரியங்கா சோப்ரா, அவரது கால்கள் தெரியும் விதமாக உடை அணிந்தி ருந்தார். 

இதனால் சமூக வலை தளங்க ளில் பலர் அதை விமர்சித் திருந்தனர். நாட்டின் பிரதமரு க்கு முன்னால் இப்படி யான கவர்ச்சி உடை அணிந்தி ருக்கக் கூடாது என்ற ரீதியில் பலர் அவரை வசை பாட ஆரம்பி த்தனர்.
இதற் கெல்லாம் பதில் சொல்லும் விதமாக சோப்ரா தனது இன்ஸ்ட கிராம் கணக்கில் இன்று மீண்டும் ஒரு புகைப் படத்தை பகிர்ந் துள்ளார். 

தனது அம்மா மதுவுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் இந்த புகைப் படத்தில் சோப்ரா தனது கால்கள் தெரியும் படியும், அவரது அம்மா மது ஷார்ட் ஸ்கர்ட்டும் அணிந் துள்ளனர். 

இந்த படத்துக்கு என்றும் கால்கள் தான், அது மரபணு க்களில் இருப்பது என்று தலைப்பு வைத் துள்ளார். இந்த படத்து க்கு இதுவரை 3.5 லட்சம் லைக்குகளுக்கு மேல் குவிந் துள்ளன. 

அங்கும், பிரியங்கா சோப்ராவை ஆதரிப் பவர்கள், எதிர்ப் பவர்கள் என நெட்டி சன்கள் வாக்கு வாதம் செய்து கொண்டி ருப்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings