கத்தார் நாட்டுடனான தொடர்பை அரேபிய நாடுகள் துண்டித்ததன் மூலம் இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித் துள்ளார்.
கத்தார் நாடு தீவிர வாதத்துக்கு துணை போவதாகக் குற்றம் சாட்டி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் உறவைத் துண்டித்தன.
எவ்வித மான தூதரக உறவு களும், வணிகம் மற்றும் போக்கு வரத்து உறவு களும் மேற் கொள்ளப் பட மாட்டாது என வளைகுடா நாடுகள் அறிவித் துள்ளன.
இந்நிலை யில், 'கத்தார் நாட்டுடனான வளைகுடா நாடுகளின் பிளவு எவ்வித த்திலும் இந்தியா வைப் பாதிக்காது' என மத்திய வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித் துள்ளார்.
மேலும், ‘கத்தார் உடனான உறவுநிலை என்பது வளைகுடா ஒத்து ழைப்புக் குழுவின் உள்நாட்டுப் பிரச்னை. வளைகுடா நாடுகளின் இந்தப் பிளவு இந்தியா வைப் பாதிக்காது.
இது போன்ற தொரு சூழலில், இந்தியர் ஒருவரு க்குக் கூட எவ்விதப் பிரச்னை யும் ஏற்படக் கூடாதென இந்திய வெளியுறவுத் துறை முயன்று வருகிறது’ என்றார்.