கத்தார் குழப்பம்... பல்லாயிரம் பேர் அகதிகள் !

கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல் படுவதாகக் கூறி, அண்டை நாடுகள் தூதரகத் தொடர்புகளைத் துண்டித்து வரும் நிலையில்,
கத்தார் குழப்பம்... பல்லாயிரம் பேர் அகதிகள் !
பல நாடுகளில் இருக்கும் கத்தார் நாட்டினரும், கத்தாரில் இருக்கும் அண்டை நாட்டி னரும் அகதிகளாகும் நிலைக் குத் தள்ளப் பட்டுள்ளனர்.

கத்தார் நாடு, தீவிரவா தத்துக்கு ஆதரவாகச் செயல் படுவதாகக் கூறி, சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய  நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள், 

தூதரகத் தொடர்புகள் உள்பட அத்தனை தொடர்பு களையும் துண்டிப் பதாக அறி வித்தன. பின்னர், இதைப் போன்ற பதில் நடவடி க்கையில் இறங் கியது கத்தார். 

மேலும், கத்தார் நாட்டின் விமான ங்கள், கப்பல்கள் அனை த்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தர விட்டு ள்ளது.

ஆனால், இது வரை மற்ற நாடுகள் கூறி வரும் அனைத்துக் குற்றச் சாட்டு களை யும் கத்தார் மறுத்து வருகிறது. 

இதை யடுத்து, கத்தார் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆணையம்,  தற்போது கத்தாருக்கு எதிராக எடுத்து வரும் நடவடி க்கைகள் அப்பட்ட மான மனித உரிமை மீறலாகும். 

இந்த நடவடிக்கை களால் குடும்பங்கள் சிதைக்கப் படுகின்றன, வியாபாரம் பாதிக்கப் படுகிறது மற்றும் பள்ளி செல்லும் மாணவர் களின் கல்வி பாதிக்கப் பட்டுள்ளது. 
கிட்டத்தட்ட 8,254 சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள், 784 ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 2,349 பஹ்ரைன் நாட்டினர் கத்தாரில் இருக்கின்றனர். அவர்களின் நிலை இப்போது என்ன? என்று கேட்கிறது. 

மற்ற அண்டை நாடுகளிலும் அயிரக்கணக்கான கத்தார் மக்கள் வசித்து வருகின்றனர். 

சமீப கால கத்தாருக்கு எதிரான நடவடிக்கை களினால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு அகதிகள் பிரச்னை உருவாகக் கூடும் என்று கூறப்படு கிறது.
Tags:
Privacy and cookie settings