அமீரக விமான நிலையங்களை கடந்து செல்லவும் கத்தார் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் உள்ள கத்தார் மக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டு டனான ராஜாங்க உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் திங்களன்று துண்டித்துக் கொண்டன.
கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள், கத்தாருடனான எல்லையையும் மூடி விட்டன.
கத்தார் உடனான வான்வழி மற்றும் கடல்வழி போக்கு வரத்தை பஹ்ரைன் நிறுத்தி விட்டது. அமீரக விமான நிறுவனங்களும் கத்தாருக்கு அளித்த சேவையை நிறுத்தி விட்டது.
விமான சேவைகள் நிறுத்தம்
இதே போல் சவுதி அரேபியாவும் கத்தாருடனா உறவு மற்றும் போக்குவரத்தை துண்டித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தார் விமான நிறுவனங்களும் சவுதி அரேபியாவுக்கு அளித்து வந்த சேவையை நிறுத்தியுள்ளது.
கத்தாருக்கான சாலைகள்
இதனிடையே வளைகுடா நாடுகள் கத்தாருடனான அனைத்து இணைப்புச் சாலைகளையும் மூடியுள்ளன.
மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள கத்தார் நாட்டு மக்கள் 2 வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டு ள்ளனர்.
மறுப்பு தெரிவித்த கத்தார்
ஆனால் கத்தார், தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிற குற்றச்சாட்டுகளை திட்ட வட்டமாக மறுத்து உள்ளது.
இது குறித்து திறந்த மனதுட னும் நேர்மையுடனும் பேச்சு வார்த்தை நடத்த வர வேண்டும் என கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
விமான நிலையங் களை கடக்க
இந்நிலையில் கத்தார் மக்கள் தங்களின் விமானங்களை மாற்றிக் கொள்வதற்காக கூட அமீரக விமான நிலையங்களை கடக்க கூடாது என அமீரக அரசு தெரிவித்துள்ளது.
கத்தாருடனான தொடர்பை துண்டித்த அரபு நாடுகளின் விமான நிலையங்களை கத்தார் மக்கள் கடந்து செல்ல ஐக்கிய அரபு அமீரக நாடுகள் தடை விதித்துள்ளன.
மாற்று விமானங்கள் மூலம்
ஏற்கனவே கத்தார் மக்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையக் கூடாது என அமீரக நாடுகள் உத்த விட்டுள்ளன.
இந்நிலையில் தங்களின் விமான நிலையங்களை கூட மாற்று விமானங்கள் மூலம் கடந்து செல்லக் கூடாது என உத்தர விட்டுள்ளது.
குவாண்டாஸ் விமானம்
மெக்ஸிகோவின் குவாண்டாஸ் விமானங்களிலும் கத்தார் பயணிகள் துபாய் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குவாண்டாஸ் விமானங்களில் ஐக்கிய அரபு அமீரகமும் பங்குதாரர் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.