கத்தார் பற்றிய சில முக்கிய தகவல்கள் !

கத்தாருடன், அண்டை நாடுகள் தங்களது ராஜிய உறவுகளை துண்டித் துள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலும் கத்தார் பொதுவாக செய்திகளில் இடம் பெறுவதில்லை.
கத்தார் பற்றிய சில முக்கிய தகவல்கள் !
எனவே 2022 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்து கிறது என்பதை தவிர அந்நாட்டை பற்றி உங்களுக்கு வேறென்ன தகவல்கள் தெரியும்?

எனவே இதோ கத்தாரை பற்றிய ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்

மக்கள் தொகை யில் அதிகப் படியாக ஆண்கள்:

2.5 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் 7 லட்சம் பெண்கள் தான் உள்ளனர். இந்த அதிகபட்ச சமச் சீரின்மை க்கு காரணம், கத்தார் மக்கள் தொகை யில் எழுந்த திடீர் எழுச்சியாகும். 

கத்தாரில் அதிகப் படியான குடியேறிகள், அதுவும் அதிக பட்சமாக இளம் ஆண்கள் உள்ளனர். 

கத்தாரில் வேலை வாய்ப்புகளில் உத்தர வாதம் இருப்பதால் சமீப வருடங்களாக மக்கள் அதிகமாக கத்தாருக்கு படை யெடுத்து வருகின்றனர். 
எனவே 2003 ஆம் ஆண்டில் 7 லட்சமாக இருந்த மக்கள் தொகை 2016 ஆம் ஆண்டு 2.5 மில்லி யனாக உயர்ந் துள்ளது.

கத்தாரில் பெண் குடியேறி களும் இருக்கி றார்கள்; ஆனால் 2022ஆம் ஆண்டு நடை பெறவிரு க்கும் உலக கோப்பை போட்டிக ளுக்கான 

கட்டட வேலை களில் ஈடுபடு வதற்காக அதிக எண்ணிக்கை யிலான ஆண்கள் கத்தாருக்கு வந்து ள்ளனர்.

அவர்கள் உலக முழுவதி லிருந்து குறிப்பாக இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளி லிருந்து வருகி றார்கள். இஸ்லாம் மற்றும் கிறித்துவர் களுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் இந்துக்கள் உள்ளனர்.

வேலைக் கான உத்தர வாதம் மற்றும் நல்ல எதிர் காலம் இருப்பினும் வேலைக் காக வந்த வர்கள் மோசமான நிலை களில் 
பணிபுரிய வற்புறுத் தப்படுவ தாகவும் அதில் பாதிக்கும் அதிக மானோர் நாட்டைச் சுற்றியுள்ள தொழிலாளர் முகாம் களில் தங்கியி ருப்பதா கவும் கூறப்படு கிறது.

கத்தார் தங்களது பணி யாளர்க ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உறுதி யளித்த போதிலும், பணி யாளர்கள் தொடர்ந்து துன்புறுத் தலை சந்திப்ப தாக அம்னெஸ்டி இண்டர் நேஷனல் தெரிவித் துள்ளது.

லண்டனில் மிகப் பெரிய சொத்து களின் உரிமை யாளர்கள்?

கடந்த பத்து வருடங் களில், லண்டனில் இடங்கள் வாங்கு வதில் கத்தார் அதிக கவனம் காட்டி வருகிறது.

லண்டனின் வானுயர்ந்த கட்டங் களான ஷராட், ஹாரட்ஸ், செல்சீ பராக்ஸ், ஒலிம்பிக் கிராமம் மற்றும் கேனரி வார்ஃப் ஆகிய கட்டங்கள் கத்தாருக்கு சொந்த மானதாக உள்ளது.

கத்தார், 35 பில்லியன் டாலரிலி ருந்து 40 பில்லியன் டாலர் வரையில் பிரிட்டனில் முதலீடு செய்து ள்ளதாக நாட்டின் நிதியமைச்சர் அல் ஷரீஃப் அல் எமாடி பிபிசியிடம் தெரி வித்தார். 
மேலும் அடுத்த 3 அல்லது 5 வருடங் களில் மேலும் 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய வுள்ள தாகவும் எமாடி தெரி வித்தார். 

கலை களுக்கு முக்கியத் துவம் கத்தார் ஒரு பழமை வாத நாடாகக் கருதப் பட்டாலும் கடந்த சில வருடங் களாக பல கண்காட்சி களுக்கு நிதி ஆதரவு வழங்கியுள்ளது. 
கத்தார் பற்றிய சில முக்கிய தகவல்கள் !
அதில் 2013ஆம் ஆண்டு மத்திய கிழக்கில் சர்ச்சைக் குரிய கலைஞ ரான டேமியன் ஹேர்ட்ஸின் பழைய கலைப் படைப்பு களின் முதல் கண் காட்சியை நடத்தியது. 

அதே சமயத்தில் கத்தார் அரசரின் சகோதரி மற்றும் கத்தார் அருங் காட்சிய கத்தின் தலைவரு மான 

ஷேக்கா-அல் -மயசா -பிண்ட் -ஹமத் பின் -காலிஃபா -அல் -தனி ஆர்ட் ரெவ்யூ என்ற இதழ் வெளி யிட்ட சக்தி வாயந்த 100 கலைப் பிரமுகர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றார். 

மேலும் இந்த கலைப் படைப்பு களை வாங்கி சேகரிக்க, அவர் 1 பில்லியன் டாலர் செல விடுகிறார் என்றும் கிசுகிசுக் கப்பட்டது. 

2008 ஆம் ஆண்டு, டோஹாவில் இஸ்லாமிய கலை களின் அருங் காட்சிய கத்தை பெருமை யுடன் திறந்து வைத்தது கத்தார். 
மூன்று கண்டங்கள் மற்றும் 1400 வருடங்கள் பழமை யான, உலகில் உள்ள முக்கிய இஸ்லாமிய கலை பொருட்கள் அதில் இடம் பெற்று ள்ளன. 

23 அடி வெண்கல கரடி பொம்மை ( டெட்டி பேர்) கத்தா ருக்கு கலையில் அதிக நாட்ட மிருந்த போதிலும், அருங் காட்சியக த்தில் மட்டுமின்றி அது பொது இடங்களிலும் வெளிப் படுத்தப்பட் டுள்ளது. 

டோஹாவில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தில், சென்ற எவரும் அங்கு விமான நிலையத்தின் நடுவில் வைக்கப் பட்டிருக்கும் 23 அடி மஞ்சள் நிற டெட்டி பேரை ( கரடி பொம்மை) கவனிக் காமல் இருந்தி ருக்க முடியாது.

20 டன் எடையுள்ள வெண் கலத்தாலான அந்த பொம்மை ஸ்விட்சர் லாந்தைச் சேர்ந்த உர்ஸ் பிஷர் என்ற கலைஞரால் உருவாக்கப் பட்டது. 

ஹமத் விமான நிலைய த்தின் அதிகாரபூர்வ குறிப்புப்படி, அந்த கரடி பொம்மை விளை யாட்டுத்தன த்தை சுட்டுக் காட்டுவ தாகவும், 
அதை கண்டால் மனிதர் களுக்கு தங்களின் குழந்தைப்ப ருவம் அல்லது தங்களின் இல்ல த்தில் உள்ள சிறப்பான பொருட் களின் நினைவில் வரும் என தெரிவிக் கப்பட் டுள்ளது. 

ஆனால் இந்த விளை யாட்டு பொம்மை, 2011 ஆம் ஆண்டு நியூயார் க்கில் ஏலம் ஒன்றில் 6.8 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்கப் பட்டது. 

பணக்கா ரர்கள் வாழும் நாடு? ஒரு சிறிய நாடு எவ்வாறு இவ்வளவு செலவு களை செய்ய முடியும்? 

அதற்கு காரணம் அதன் எண்ணெய், வாயு வளம் மற்றும் சில நல்ல முதலீடுகள் ஆகும். உலகி லேயே அதிகமான உள்நாட்டு மொத்த உற்பத்தி விகித த்தை கொண்ட நாடு கத்தா ராகும். 

2016 ஆம் ஆண்டு கத்தாரின் உள்நாட்டு உற்பத்தி விகிதம், 1,29,700 டாலர் களாக இருந்தது என சி.ஐ.ஏவின் உலக நாடுகளின் குறிப்புகள் அடங்கிய தகவல் புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 
கத்தார் பற்றிய சில முக்கிய தகவல்கள் !
அதே சமயம் சோமாலி யாவின் தனி நபருக் கான உள்நாட்டு உற்பத்தி வெறும் 400 டாலர் களாக உள்ளது. இருப்பினும் கத்தாரின் வளங்கள் சமத்துவ மானதாக இல்லை. 

முன்னாள் அரசரான ஷேக்-ஹமத்-பின்-காலிஃபா-அல்-தனியின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் டாலர் களாக இருந்த போதிலும் 

அங்கு குடிபெயர்ந் தர்களை பிபிசி நேர் காணல் செய்த போது அவர்கள் மாதம் வெறும் 350 டாலர்கள் மட்டுமே சம்பாதிப்ப தாக தெரிவித் தனர்.
Tags:
Privacy and cookie settings