ராஜஸ்தான் மாநிலம் ஜாலிவாடா கிராம த்தைச் சேர்ந்தவர் பன்வாரி தேவி. அங்கு நர்ஸாக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும்
அப்போதைய அமைச்சருமான மகிபால் மடெர்னாவுடன் தேவி நெருக்கமான இருப்பது போன்ற வீடியோ வெளியானது.
இதைத் தொடர்ந்து 2011 செப்டம்பர் 1-ம் தேதி அவர் திடீரென காணாமல் போனார். போலீஸ் விசாரணை யில் அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் இந்திரா பிஸ்னோய் என்ற பெண் மட்டும் போலீஸ் பிடியில் சிக்காமல் தலை மறைவாக இருந்தார்.
சுமார் 6 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த அவர் மத்தியப் பிரதேசம் தேவாஸ் அருகே நெமாவர் என்ற பகுதியில் நேற்று முன் தினம் இரவு கைது செய்யப் பட்டார்.