தவறான மெஸேஜை திரும்பப் பெறும்... வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக் கூட இன்றைய தலைமுறை யினரால் கடத்தி விட முடியாது. அலுவலகப் பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரை யாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
தவறான மெஸேஜை திரும்பப் பெறும்... வாட்ஸ்அப் !
உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன் படுத்துகி ன்றனர். இந்தியா வில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன் படுத்துகி ன்றனர்.

வாட்ஸ்அப் - புதிய வசதிகள்

வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப் படுத்து வதற்கு முன், டெஸ்ட்டர் களுக் கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப் படுத்தி சோதிப்பது வழக்கம். 

அதன் பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவ ருக்கும் அறிமுகப் படுத்தப் படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version - 2.17.210), 

அசத்த லான சில புதிய வசதிகள் அறிமுகப் படுத்தப்பட் டுள்ளன. இவை விரைவில் அனைவ ருக்கும் அறிமுகப் படுத்தப் படலாம்.

மெஸேஜை திரும்பப் பெறலாம் :
வாட்ஸ் அப்பில் தவறுத லாக ஒரு மெஸேஜை அனுப்பி விட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாமல் சிரமப் பட்டிருப் போம். 

மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பிய வரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். 

பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னை  க்கு முற்றுப் புள்ளி வைத்திரு க்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப் பெற்றுக் கொள்ள 'Unsend' என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. 

திரும்பப் பெற நினைக் கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் 'Unsend' ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடி யாக மெஸேஜ் திரும்பப் பெறப்படும். 

ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங் களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப் பெற முடியும். அதற்கு மேல் நேரமாகி யிருந்தால் மெஸேஜை திரும்பப் பெற முடியாது. 

ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடி யாக நீக்கப் பட்டு, அன்சென்ட் செய்யப் பட்ட விவரம் மட்டும் தெரிவிக் கப்படும்.

லைவ் லொக்கேசன் :
வாட்ஸ் அப்பில் ஓர் இருப் பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவ ருக்கும் தெரிந்தி ருக்கும். 

இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லிய மாக அறிந்து கொள்ள முடியும். 

இதே போல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப் பிடத்தை அறிந்து கொள்ளும் வகையில் 'லைவ் லொக்கேசன்' ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப் படுத்தி யுள்ளது. 

ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பி னால், அதன் மூலம் அந்நபர் பயணி க்கும் இருப்பிடங் களின் லொக்கேசனை அறிந்து கொள்ள முடியும். 

பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங் களுக்காக இதைப் பயன் படுத்திக் கொள்ள லாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக் கேசனைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :
வாழ்வின் அத்தனை இனிமை யான தருணங்க ளையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர் களுடன் பகிர்ந்து கொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். 

புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ள முடியும். 24 மணி நேரம் இந்த ஸ்டேட் டஸை மற்றவர் களால் பார்க்க முடியும். 

இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. 

மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்து ருவின் வடிவங் களை மாற்றிக் கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட் டஸிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இவை அனைத்தும் தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயனாளி களுக்கு மட்டுமே அறிமுகப் படுத்தப் பட்டிருக் கின்றன. மேலும், Unsend வசதியானது ரூட் அக்சஸ் கொடுத்த பின், Xposed framework இன்ஸ்டால் செய்தால் மட்டுமே 

வேலை செய்யும். அனுப்பு னரும், பெறுநரும் பீட்டா வெர்ஷன் பயன் படுத்தி னால் மட்டுமே இந்த வசதியைப் பயன் படுத்த முடியும். இந்த வசதிகள் சில மாற்றங் களோடு விரைவில் அனைவ ருக்கும் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம்.
Tags:
Privacy and cookie settings