ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் கல்வியறிவில் அதிகளவில் பின் தங்கியுள்ளனர். இதனால், இங்கே மூட நம்பிக்கை அதிக அளவில் பரவிக் கிடக்கிறது.
தற்போது, 'வழுக்கைத் தலை ஆண்களின் தலையினுள் தங்கம் இருக்கிறது', 'வழுக்கைத் தலை ஆட்களைக் கொன்றால் பணம் கொழிக்கும்'
என யாரோ கிளப்பி விட, அந்த நாட்டு மக்கள் அதை உண்மை என நினைத்துக் கொண்டு வழுக்கை ஆண்களை வலை போட்டுத் தேடி வருகி றார்கள்.
இது வரை மூன்று ஆண் களைக் கொலை செய்து மண்டையைப் பிளந்து பார்த்திருக் கிறார்கள்.
குறிப்பாக, மிலாங்கே மாவட்டத்தில் இந்த வதந்தி வேகமாகப் பரவி, வழுக்கைத் தலையோடு சுற்று பவர்களை மக்கள் வெறி கொண்டு தேடுகிறார்களாம்.
இந்தச் செய்தி யால் அதிர்ச்சியுற்ற காவல் துறை, வேகமாக செயலில் இறங்கி யுள்ளது. இது ஒரு வதந்தி. எந்த வழுக்கைத் தலைக்குள்ளும் தங்கம் இருக்காது.
ஏதேனும் தவறான முயற்சி எடுத்தால், கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று எச்சரித் துள்ளனர்.
இருந் தாலும், 'வழுக்கைத் தலை யோடு வெளியே செல்லும் ஆண்கள் பாது காப்பாகச் செல்ல வேண்டும்' என்றும் காவல் துறை அறிவுரை கூறி யுள்ளது.
இதனால், வழுக்கைத் தலை கொண்ட ஆண்கள் வெளியே செல்வதற்கே பயப்படுகி றார்களாம்.