தனியார் பாலில் கலப்படம் செய்யப் படுவதாக தமிழகத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனால் பாலில் கலப்படம் குறித்து ஆராய, மதுரை ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் பால் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் முழுவதும் ஐந்து கட்டங்களில் பால் தர பரிசோதனை 28 குழுவின் தலைமையில் நடந்து வருகிறது .
அதில் மதுரை மாநகருக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 மாதிரிகள் இன்று முதல் கட்டமாக எடுத்து வரப்பட்டு கோ.புதூர் பகுதியில் ஆய்வு செய்யப் பட்டது .
அதில் மதுரை கோச்சடை பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தனியார் பால் மாதிரியில் சோப்பு ஆயில் கலந்தி ருப்பது இயந்திரம் மூலம் கண்டு பிடிக்கப் பட்டது .
அதனை தொடர்ந்து அந்த பாலை முழு ஆய்வு செய்யப்பட்டு அதன் அறிக் கையை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். அதன் தலைமை பொறுப் பினை ரமேஷ் என்ற அதிகாரி மேற் கொள்வார் என்று தெரி வித்தார்.
அதிக நுறை வருவதற் காக பாலில் சோப்பு ஆயில் கலந்திரு க்கலாம் என்று அதிகாரி கள் தெரிவித் துள்ளனர். இந்தச் செய்தி, மதுரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
இது குறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி யளித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ‘தனியார் பால் நிறுவ னங்கள் இது போன்று கலப்படம் செய்வது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித் துள்ளார்!