அவர்களால உயிரோட இருக்கேன்... சுபாஜாவின் கதை !

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குச் சென்று வந்தவர்கள், சுபாஜாவை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். கருணை நிறைந்த கண்கள், தன்னம் பிக்கை மிளிரும் பேச்சு என வலம் வருபவர்.
அவர்களால உயிரோட இருக்கேன்... சுபாஜாவின் கதை !
எழுதப் படிக்கத் தெரியாத வர்களின் குறை களைக் கேட்டு, மனுக்கள் எழுத உதவி செய்பவர். மாற்றுத் திறனாளி களை இந்தச் சமூகம் தன்னி லிருந்து பிரித்து, வேற்றுக் கிரகத்தி லிருந்து வந்தவர் களைப் போல பார்க்கிறது. 

அவர்கள் எதற்கும் லாயக் கற்றவர்கள் என ஒதுக்கி வைக்கிறது. ஆனால், எத்தனை வலிகள் வந்தாலும், தங்க ளாலும் தன்னம் பிக்கையுடன் வாழ முடியும் 

என்பதை நிரூபித்துக் கொண்டி ருக்கும் பல்லாயிரம் மாற்றுத் திறனாளி களில் ஒருவர், சுபாஜா. மனுக்களை 

எழுதிக் கொடுத்து மற்றவர்கள் வாழ்வில் மாற்ற த்தை ஏற்படுத்தி வரும் சுபாஜா, தன் வாழ்வில் நடை பெற்ற மாற்றங் களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘என் அப்பா எப்படி இருப்பாருனு கூட பார்த்த தில்லை. என் அம்மா நான் அஞ்சாவது படிக்கிறப்ப இறந்து ட்டாங்க. எங்களு க்குச் சொந்த ஊரு நாகர் கோவில். 

எனக்கு மூணு அக்கா, மூணு அண்ணன். பெற்றோர் இல்லாத தால், ஆதரவற்றோர் விடுதியில் தங்கி யிருந்தபடி ஸ்கூல் படிச்சுட்டி ருந்தேன். 
ஒரு முறை நாகர் கோவிலுக்குப் போறதுக்காக, கிளம்பிட்ட டிரெய்னில் ஓடிப்போய் ஏறினேன். அப்போ, தவறி விழுந் துட்டேன். அரசு ஆஸ்பத் திரியில் சிகிச்சை கொடுத் தாங்க. 

இனிமேல் நடக்க முடியா துன்னு சொல் லிட்டாங்க. அதைக் கேட்டதும் என் தலையில் பெரிய சம்மட்டி யால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. 


நேத்து வரை ஓடி ஓடி சுற்றிவந்த இடங்களில் காலை இழுத்துக் கிட்டு தவழ்ந்த போது, 'இப்படி வாழறது க்குப் பதிலா செத்துப் போயிடலாம்' னு நினைச் சுப்பேன்’’ என குரல் தழுதழுக்கத் தொடர்ந்தார் சுபாஜா.

‘‘உடல் உபாதை களைக் கழிக்கவே சிரமப் பட்டேன். அன்பு காட்டி உதவ வேண்டிய அக்கா, அண்ணன் களோ வார்த்தை களால் ஈட்டியைப் பாய்ச்சுற மாதிரி பேசினாங்க. 'இவளை எங்களோடு வெச்சுக்க முடியாது. 

அனாதை ஆசிரம த்தில் சேர்த்து விட்டு டுங்க'னு கைகழுவி ட்டாங்க. ஒரு கிறிஸ்துவ சிஸ்டர்ஸ் கான்வென்ட்ல சேர்ந்தேன். 

கால்களில் ஏற்பட்ட புண் சரியாகவே பல நாள் ஆச்சு. சிஸ்டர்ஸ் கிட்ட 'என்னை எப்படி யாவது காலேஜ் படிக்க வைங்க. அந்தப் படிப்பை வெச்சு நான் பொழைச் சுக்கிறேன்'னு சொன்னேன். 

அவங்களும் சென்னை யில் படிப்பைத் தொடர உதவி னாங்க. பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன்’’ என்றவர், அப்போது சந்தித்த சிரமங் களைச் சொன்னார்.
‘‘ஒண்ணு, ரெண்டு இல்லீங்க. நிறையவே சிரமப் பட்டேன். ஜெர்மனில் இருக்கிற ஓர் அம்மாவு க்கு ரொம்பவே கடமைப் பட்டிருக்கேன். அவங்க தான் என் படிப்புக் கான தொகையை ஸ்பான்சர் பண்ணி னாங்க. 

செயற்கை கால் பொருத்திக்க ஏற்பாடு செஞ்சாங்க. அது செட்டா காமல் கால்களி லிருந்து ரத்தம் வடியும். கொஞ்ச நேரம் முட்டிப் போடுறதே அவ்ளோ கஷ்டம். 

நான் எங்கே போனாலும் முட்டிப் போட்டுக் கிட்டுதான் போவேன். அப்புறம், பெங்களூரில் ஒரு ஆபரேசன் செஞ்சு, செயற்கை காலைப் பொருத் தினாங்க. 

காலேஜ் முடிச்சதும் என் அக்கா வீட்ல கொண்டு போய் விட்டுட் டாங்க. அங்கே, அக்கம் பக்கம் இருக்கிற பசங்களுக்கு டியூசன் எடுத்தவாறு கொஞ்ச நாள் இருந்தேன். 

அந்தச் சூழல் எனக்குப் பிடிக்கலை. சிவகங்கை கலெக்டர் அலுவல கத்தில் மனு எழுதித்தர ஆரம்பிச்சேன். அதுதான் எனக்குள்ளே தன்னம் பிக்கையை யும், சுயமாக நிற்கும் உணர் வையும் கொடுத் திருக்கு என நெகிழ்கிறார் சுபாஜா.
நிலப் பிரச்னை, பென்சன் வரலைனு ஏகப்பட்ட பிரச்னை யோட பலரும் வருவாங்க. மனுசுல இருக் கிறதை மனுவா எழுதச் சொல்லு வாங்க. நான் அவங்க என்ன சொல்ல வர்றாங்கனு புரிஞ்சுக் கிட்டு, மனு எழுதித் தருவேன். 

அதற் கான தீர்வு கிடைச்சதும் மனசார வாழ்த் திட்டுப் போவாங்க. வாழ்வே நிர்மூலமா யிருச்சுனு நினைச் சுட்டிருந் தப்போ, எத்தனையோ பேர் செஞ்ச உதவியால் தான், இன்னிக்கு மத்தவங் களுக்கு உதவும் நிலைக்கு வந்திரு க்கேன். 

அதனால், மனு எழுது றதுக்கு இவ்வளவு காசுனு நானா எதுவும் கேட்க மாட்டேன். அவங்களா விருப்பப் பட்டு தர்ற பணத்தை வாங்கிப்பேன். 

ஒருத்தர் அஞ்சு ரூவா தருவார், ஒருத்தர் ஐம்பது ரூபாய் தருவாங்க. சிலர், 'சில்லறை மாத்திட்டு வரேன்'னு சொல்லிட்டு அப்படியே போய்டு வாங்க. 

சிலர்,காசு இல்லேம்மா. ஊருக்குப் போக வண்டி சார்ஜ்க்கு தான் துட்டு இருக்கு'னு சொல்வாங்க. காசு கெடக்கட்டும். 

என்ன எழுதணும்னு சொல்லுங்க'னு கேட்டு எழுதிக் கொடுப்பேன் என்று புன்னகையுடன் சொல்கிறார் சுபாஜா.

தற்போது, குரூப் 2 தேர்வு க்குத் தயாராகி வரும் சுபாஜா, ''ஒரு பக்கம் சுய நலமான மனிதர்கள் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த உலகம் அன்பான வர்களால் நிறைஞ்சிருக்கு. 
அவங்களோட உதவியும் ஆதரவும் எனக்குத் தொடர்ந்து இருக்கு. ஏமாற்றுப் பேர் வழிகளை அடை யாளம் காணும் அறிவு கிடைச் சிருக்கு. 

இந்த மனு எழுதும் வேலையில் என் தேவைக் குப் போதுமான பணம் கிடைக்குது. அதைவெச்சு தனியாக வீடு பிடிச்சு வாழ்ந்து ட்டிருக்கேன். 

அவர்களால உயிரோட இருக்கேன்... சுபாஜாவின் கதை !
கூடிய சீக்கிரம் அரசாங்க வேலை க்குப் போயி டுவேன். யாரும் என்னை அனுதாபத் தோடு பார்க்கி றதை விரும் பலை. எங்களை மாதிரி யான ஆட்களு க்கு மத்தவங் களின் அனுதாபம் வேண்டாம். 

உங்களோடு சேர்ந்து இந்தச் சமூகத்தில் இயங்க ஆதரவும் ஒத்துழை ப்பும் இருந்தால் போதும். 

தினம் தினம் போராடிக் கிட்டு இருக்கிற வங்களுக்கு தன்னம் பிக்கை கிடைக்கும். சுய மரியாதை யோடு சக மனிதர்கள் போல வாழ்வோம்'' என்கிற சுபாஜா குரலில் கம்பீரம்.
Tags:
Privacy and cookie settings