உடல் எடை குறைய முட்டை சாப்பிட வேண்டுமா?

உடல் எடை அதிகமாக இருப்பது இன்று பலரது பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வதால் பல நோய்களில் இருந்து விடுபட முடிகிறது.
உடல் எடை குறைய முட்டை சாப்பிட வேண்டுமா?
அளவான உடல் எடை ஆரோக்கி யமாகவும் அழகாக வும் வாழ உதவுகிறது. முட்டையை உடல் பருமனை அதிகரிப் பதற்காக சாப்பிட்டு கேள்விப் பட்டிருப் போம் ஆனால் முட்டை உடல் பருமனை குறைக் கவும் உதவுகிறது.

இரண்டு முட்டை

பருமனான உடலை குறைக்க வேண்டும் என்று நினைப் பவர்கள், காலை உணவாக இரண்டு முட்டை களை மட்டுமே சாப்பிடுவது நன்மை விளை விக்கும் என ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக் கிறது.

ஆராய்ச்சி

இது தொடர்பான ஆய்வு, அமெரிக்கா விலுள்ள பென்னிங்டன் பயோ மெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்விகமாக கொண்ட வருமான நிகில் வி. துரந்தர் என்பவரது தலைமையில் நடைபெற்றது.

குறைவான கலோரி 

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். 
உடல் எடை குறைய முட்டை சாப்பிட வேண்டுமா?
தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிடுவதால், மற்ற காலை உணவுகளை உண்பவர்களை காட்டிலும் 65 % குறைவாக கலோரிகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்.

ஆரோக்கியம் 

காலை உணவாக இரண்டு முட்டைகளை உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப் பாகவும் செயல்பட முடிகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடிகிறது.

இதய பாதுகாப்பு 

தினமும் முட்டை உண்பவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறைவு எனவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன
Tags:
Privacy and cookie settings