லெக்கின்ஸ் அணிந்த வந்த 2 இளம் பெண்களை அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏஜெண்ட் தடை விதித்தார்.
அமெரிக்காவில் டென்வரில் இருந்து மின்னெ பொலீஸ் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்ய 2 இளம் பெண்கள் வந்தனர்.
அப்போது அவர்கள் இறுக்கமான ‘லெக்கின்ஸ்’ உடை அணிந்து இருந்தனர். எனவே அவர்கள் அந்த விமானத்தில் பயணம் செய்ய யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏஜெண்ட் தடை விதித்தார்.
வேறு உடை இருந்தால் அதற்கு மேல் வேறு ஆடை அணிந்து செல்லுமாறு கூறினார். அப்பெண்ணிடம் வேறு உடை இல்லாததால் அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டது.
இதே போன்று ‘லெக்கின்ஸ்’ அணிந்து வந்த மற்றொரு இளம் பெண்ணும் தடுத்து நிறுத்தப் பட்டார். ஆனால் அவர் வேறு உடை அணிந்ததால் பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டார்.
‘லெக்கின்ஸ்’ சை காரணம் காட்டி 2 இளம் பெண்கள் விமான த்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
அதற்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் ஏஜெண்ட் விளக்கம் அளித்தார். அனைத்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பாதுகாப்புக்காக தான் இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.
எங்களது விமானங்களில் பயணம் செய்ப வர்கள் செருப்பு இல்லாமல் வெறுங் கால்களுடனோ, அல்லது உரிய ஆடை அணியாமல் இருந்தாலோ பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என்றார்.
அதே நேரத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவன த்தின் செய்தி தொடர் பாளர் ஜோகாதன் குயரின் வேறு விதமான கருத்து தெரிவித் துள்ளார்.
‘லெக்கின்ஸ்’ அணிந்து இருந்த தால் 2 இளம் பெண்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டது என்பது தவறு.
அவர்கள் யுனைடெட் விமான நிறுவன ஊழியர்களின் பாஸ் பயன் படுத்தினர். எனவே அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப் பட்டது என்றார்.