புனித ரமலான் மாதத்தின் இறுதி நாள், ` ஈத் அல் ஃபித்ர் ` என்ற முக்கிய மான விடு முறை நாளாக இஸ்லாமி யர்களால் குறிப்பிடப் படுகிறது.
இந்த நாளில் ரமலான் நோன்பு இருந்த அனைத்து இஸ்லாமி யர்களும் சிறந்த உடை களை உடுத்தி, உணவு விருந்து களை நடத்து வார்கள் .
ஆனால் உலகின் மிகப் பெரிய நிகழ்வு களில் ஒன்றான இந்த நாள் என்றைக்கு என்று முடிவு செய்யப் படுவது எத்தகைய சிக்கலான விஷய மாகவே
இருக்கிறது என்பதை அஹ்மன் கவாஜா மற்றும் அமிர் ராவஷ் ஆகியோர் விளக்கு கிறார்கள்.
நிலவின் சக்தி:
இஸ்லாமிய புனித மாதமான ரமலான், தனது இறுதி நாட்களை நெருங்கும் போது, தங்களது ஈத் கொண்டா ட்டங்களை துவங்கும் ஒரு குறீயிடாக,
தெளிவான வானத்தை உலகம் முழுவதும் உள்ள 1.8 பில்லியன் இஸ்லாமி யர்கள் எதிர் பார்க்கி றார்கள்.
நிலவின் நிலை களை அடிப்படையாகக் கொண்ட சந்திர நாள் காட்டியை இஸ்லாம் பின் பற்றுகிறது. இதன் ஒன்பதாம் மாதத்தில் ரமலான் துவங் குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், இந்த சந்திர காலண் டரில் வரும் ரமலான் மாதம் , முந்தைய சூரிய காலண்டர் ஆண்டில் வந்ததை விட 11 நாட்கள் முன்னதாக வருகி ன்றது.
நிலவு நாள் காட்டியை பயன்படுத்துவது இஸ்லாமியர்களின் குறிப்பிடத் தக்க ஒரு தனித்து வமாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாடும் அனுபவங் களில் பல்வேறு தாக்கங் களை ஏற்படுத்து கிறது.
ரமலான் மாதத்தின் போது, சூரிய உதயத்தி லிருந்து அஸ்தமனம் வரை உணவு மற்றும் நீர் அருந்தாமல் இஸ்லாமி யர்கள் நோன்பை கடை பிடிக்கிறா ர்கள்.
ஒரு வேளை இஸ்லாமிய மாதங்கள் சூரிய நாள் காட்டியை அடிப்படை யாகக் கொண்டி ருந்தால்,
உலகின் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அதிக பகல் நேரத்தை கொண்ட கோடை காலத் திலும், மற்ற பகுதி களில் வாழும் மக்கள் குறைந்த
பகல் நேரத்தை கொண்ட குளிர் காலத் திலும் ரமலான் மாதத்தை கடை பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டி ருக்கும்.
ஆனால் நிலவு நாள் காட்டியை பின் பற்றுவ தால், ஒவ்வொரு இஸ்லாமி யரும் தங்கள் வாழ் நாளில் 33 ஆண்டுகள் வெவ்வேறு கால நிலை களில் ரமலான் நோன்பை கடைப் பிடிக்கி றார்கள்.
குழப்பம்:
நிலவு நாள் காட்டியின் பத்தாவது மாதமான ஷாவ்வா லின் முதல் நாள் ஈத் பண்டிகை வருகிறது.
ஆனால் ஈத் பண்டிகை துவங்கும் நாள் குறித்து, இஸ்லாம் மதத்தி ற்குள் விவாத ங்கள் இருந்து வருகின்றன.
பெரும் பாலான நாடுகளில் உள்ள இஸ்லாமி யர்கள், வானில் நிலவை பார்ப்ப தற்கு பதிலாக, நிலவு தெரிவது குறித்த அதிகாரப் பூர்வ தகவல் என செய்தி களில் கூறப்படும் தகவல் களை நம்புகி றார்கள்.
சிலர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிலவு நாள் காட்டியை பின் பற்றியும், வேறு சிலர் கோள் களின் நிலையைப் பார்த்தும்,
புது நிலவின் வருகையை அறிவிக்கி ன்றனர். இன்னும் சிலர் வானில் பிறை நிலவை பார்த்த பின்னரே புது மாதத்தை குறிக்கி ன்றனர்.
உலகம் முழுவதும் ஈத் நாள் ஒரே மாதிரி யாக இருப்ப தில்லை. பொது வாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேறு பாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் இருக் கின்றன.
எடுத்துக் காட்டுக்கு, இஸ்லாம் மதத்தின் பிறப்பிட மான, சுன்னி இஸ்லாமி யர்கள் ஆதிக்கம் நிறைந்த, சவுதி அரேபியா வில்,
கண் களால் நிலவை பார்த்து உறுதி செய்யப் பட்டு, அரசு வெளியிடும் அறிவிப்பை மக்கள் சார்ந்திருக் கின்றனர்.
ஷியா பிரிவு இஸ்லாமி யர்கள் பெரும் பான்மை யாக இருக்கக் கூடிய ஈராக் நாட்டில் இரண்டு முறை களிலும் ஈத் நாள் குறிக்கப் படுகிறது.
ஷியா பிரிவு மத தலைவரான அயோத்துல்லா அலி அல் சிஸ்டா னியின் அறிவிப் பையும் அப்பிரிவு மக்களும், சிறு பான்மை யினரான சுன்னி பிரிவு மக்கள் தங்கள் மத குருக் களின் அறிவிப்பையும் பின்பற்று கின்றனர்.
பல ஆண்டு களுக்கு பிறகு கடந்த 2016-ஆம் ஆண்டு முதன் முறை யாக ஈராக் நாட்டில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு மக்கள் ஒரே நாளில் ஈத் அல் பித்ர் நாளை கொண் டாடினர்.
இதே சமயத் தில் மதச்சார் பற்ற நாடாக அதிகாரப் பூர்வமாக அறிவிக் கப்பட்டிரு க்கும் துருக்கி யில், வானியல் கணக்கீடு களை கொண்டு ரமலான் மாதத்தின் துவக்கம் மற்றும் இறுதி நாள் முடிவு செய்யப் படுகிறது.
ஐரோப்பா வில் உள்ள பெரும் பாலான இஸ்லாமி யர்கள் தங்கள் சமுதாய மதத்தலை வர்களின் அறிவிப்பு களுக்காக காத்திருக் கின்றனர்.
இது ஒரு வேளை, மற்ற முஸ்லிம் நாடுகளில் நிலவைப் பார்ப்பதை சார்ந்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படு த்தும்.