கத்தாரில் இந்தியர்களின் நிலை என்ன?

கத்தார் நெருக்கடி காரணமாக, அங்கு பல ஆண்டுகளாக வேலையில் உள்ள இந்தியர்களின் நிலை பற்றி தெரிந்து கொள்ள பல இந்திய குடும்பங்கள் பதற்றத்துடன் தொலைபேசி வழியாக அங்குள்ள நிலவரம் பற்றி விசாரித்து வருகின்றனர்.
கத்தாரில் இந்தியர்களின் நிலை என்ன?
ஆனால் பெரும் பாலானோர் கத்தாரில் சுமூகமான நிலை காணப்படுவதாகவே தெரிவித் துள்ளனர்.

கத்தாரில் வசித்து வரும் சுமார் ஏழு லட்சம் இந்தியர்களில் சுமார் பாதி அளவு மக்கள் தென் மாநி லமான கேரளாவை சேர்ந்த வர்கள். 

கேரளா வில் இருந்து வருபவர்கள் கத்தாரில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் முதல் கட்டுமானத் துறை வரை என பல்வேறு தொழில் களில் ஈடுபட் டுள்ளனர்.

'விரைவில் எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பும் என்று என் கணவர் கூறினார். ஆனால் நேற்று இரவு அவர் மார்கெட்டு க்கு சென்ற போது அங்கு மீன் அல்லது 

கோழிக் கறி என எதுவும் கிடைக் கவில்லை என்றார். எல்லா உணவு பொருட் களும் சௌதி அரேபியவில் இருந்து தான் வருகின்றன,'' என்றார் நபீஸா.

தோகாவில் ஒரு பன்னாட்டு நிறுவன த்தில் வேலை செய்து வரும் தீபக் குமார் ஷெட்டி க்கும் இதே நிலை தான் ஏற்பட்டது.
அடுத்த பத்து நாட்க ளுக்கு தேவை யான எல்லா பொருட் களையும் மக்கள் வாங்கி வைத்துக் கொண்டு ள்ளனர் என்பது உண்மை தான். 

கோழிக்கறி மற்றும் பால் போன்ற பொருட்களை பெறுவதில் சில சிரமம் இருக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம். 

ஆனால் இதை பற்றி கவலைப் படவேண்டாம் என அரசாங்கம் ஒரு அறிக்கை விடுத் துள்ளது,' என்றார் தீபக் குமார் ஷெட்டி. கத்தாரில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் நிறைந் திருக்கிறது. 

ஆனால் உணவுப் பொருட் களுக்கு அண்டை நாடான சௌதி அரேபியாவை தான் முற்றிலும் சார்ந்துள்ளது. 

இந்த சிக்கலான நிலை தொடர்ந்தால், உணவு பொருட்கள் இரானில் இருந்து கொண்டு வரப்படும் என்று சில இந்தியர்கள் எதிர் பார்க்கின்றனர்.

''இங்கே எந்தவித பயமும் இல்லை. அமைதி நிலவு கிறது. கர்நாடகா மற்றும் தில்லி ஆகிய இடங் களில் உள்ள பல நண்ப ர்களிடம் இருந்து எனக்கு அதிகமான அழைப் புகள் வந்தன. 

இங்கு பாது காப்பாக இருப்பதை அவர்க ளுக்கு நான் உறுதிப் படுத்த வேண்டி யிருந்தது, "என்று ஷெட்டி கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாத, கத்தாரில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த மற்றொருவர், ''பல்வேறு விமான நிறுவ னங்கள் டிக்கெட்டு களை ரத்து செய்து விட்டன.  கத்தாரில் இந்தியர்களின் நிலை என்ன?
'இதனால் பல வணிகர்கள் வருத்த த்தில் உள்ளனர். அவர்களின் பயணம் மட்டு மல்ல, அவர்களின் முதலீடுகள் கத்தாரில் உள்ளன,'' என்றார் அவர்.

ஆனால் முன்ன தாக வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து, தற்போது கத்தாரில் உள்ள சில இந்தியர் கள் நம்பிக்கை யுடன் உள்ளனர்.

'வருந்துவதற்கு ஒன்றும் இல்லை. நான் கடந்த 12 ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். எந்த விதமான பதட்டமான சுழலும் இங்கு இல்லை. 

அத்தியா வசிய உணவு பொருட் களை பெற மக்கள் வரிசையில் நிற்கி றார்கள் என்பது உண்மை தான். ஆனால் இதே போன்ற ஒரு பிரச்சனை முன்பு 2014ல் உருவானது. 
ஆனால் அது விரைவில் தீர்ந்து விட்டது, என்றார் இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் கிரிஷ் குமார்.

இந்திய அமைப்பு களின் பிரதி நிதிகள் இந்திய தூதரக அதிகாரி களுடன் ஒரு சந்திப்பை மேற் கொண்டனர். உண்மையில் எந்தத் தொந்தரவும் இல்லை என்று அவர்கள் கண்ட றிந்தனர், என்றார் அவர்.
Tags:
Privacy and cookie settings