கர்நாடகாவில் உள்ள அரசு மருத்துவ மனையில் 71 வயதான நோயாளி எக்ஸ்ரே அறைக்கு செல்வதற்கு வீல் சேர் தரப்படாததால் வயதான மனைவியே அவரை தரையில் இழுத்துச் சென்ற அவல சம்பவம் அரங்கேறி யுள்ளது.
இந்த சம்பவ வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது. கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர் ஆமீர் சாப் (71).
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவரை, மனைவி ஃபாமிதா (67) கடந்த 9 நாட்களுக்கு முன்பு ஷிமோகா அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தார்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் சாதாரண அறையில் தங்க வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை அமீர்சாபுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என மருத்து வர்கள் ஃபாமிதா விடம் தெரிவித் துள்ளனர்.
நடக்க முடியாமல் இருந்த அவரை அருகில் உள்ள எக்ஸ் - ரே மையத் துக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு மருத்துவ மனை ஊழியர் களிடம் ஃபாமிதா மன்றாடி யுள்ளார்.
ஊழியர்கள் உதவ மறுத்த தால், அருகில் இருந்த செவிலி யரிடம் 'வீல் சேர்' (சக்கர நாற்காலி) தருமாறு கேட்டுள்ளார். அதற்கு செவிலியர், 100 ரூபாய் கொடுத்தால் தான் வீல் சேர் தருவேன்.
ஸ்ட்ரெச்சர் வேண்டு மானால் ரூ. 150 தர வேண்டும் என ஃபாமிதா விடம் கேட்டு ள்ளார். அதற்கு ஃபாமிதா, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அவரால் எழுந்து நிற்ககூட முடிய வில்லை.
அதனால் தான் வீல் சேர் கேட்கிறேன். அவரை தூக்கும் அளவுக்கு எனக்கு வலிமை இல்லை. இல்லா விடில் நானே தூக்கி சென்று விடுவேன். தயவு செய்து வீல் சேர் தாருங்கள்” என கெஞ்சி யுள்ளார்.
அப்போதும் செவிலியர் இரக்கப் படாததால் ஃபாமிதா தனது கணவரின் இரண்டு கால் களையும் பிடித்து தரையில் இழுத்து சென்றார்.
ஆமீர் சாபின் முதுகு தரையில் உராய்ந்த தால் அவர் வலியால் துடித்த வாறு கதறி யுள்ளார். இதனை நேரில் கண்ட யாரும் அந்த தம்பதிக்கு உதவாமல் வேடிக்கை பார்த்து ள்ளனர்.
இந்த அவல சம்பவத் தின் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி அதிர்வலை களை ஏற்படுத்தி யுள்ளது.
இதனை கன்னட தொலைக் காட்சி சேனல்கள் நேற்று ஒளிபரப்பி யதை தொடர்ந்து கர்நாடகா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
இதற்கு காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சிகளின் தலைவ ர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ள நிலையில், சமூக வலை தளங்களி லும் அரசு மருத்துவ மனை நிர்வாகத் துக்கு கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது.