ரஜினி படத்தின் ஒட்டு மொத்த நடிகர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலான நாள்கள் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்ட மிட்டிருந்தாலும்,
ரஜினி ஜூன் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சென்னை க்குத் திரும்புகிறார்.
காலாவில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை அங்கேயே தங்கியிருந்து தன் யூனிட்டோடு தொடர்ந்து படப் பிடிப்பை நடத்து கிறார் பா. ரஞ்சித்.
சென்னை யில் பிவிபி சினிமா ஸ்டூடியோ வில், தாராவியை கண்முன்னே நிறுத்தும் தத்ரூப மான செட் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பிரமாண்ட மாக அமைத்தி ருக்கின்ற னர்.
மும்பையில் ரஜினி நடிக்கும் காட்சி களை எவ்வளவு பாதுகாப்போடு நடத்தி னாலும், ஷூட்டிங் ஸ்பாட்டின் போட்டோக் களை செல்போன் கேமரா மூலம் லபக் செய்து
இன்டர்நெட், வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வருகின்றனர். ‘காலா’வில் ரஜினி நடிக்கும் அதிமுக்கி யமான காட்சிகளின் படங்கள், பேசும் அரசியல் பன்ச் வசனங்கள் வெளியே கசிந்து விடக் கூடாது
என்பதில் மிகக் கவனமாக இருக்கி றார்கள் படக் குழுவினர். ரஜினி நடிக்கும் ஹைலைட் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்கள் நிறைந்த காட்சிகளை,
நம்பகத் தன்மை யுள்ள யூனிட் ஆள்களோடு சென்னை யில் அமைக்கப் பட்டுள்ள தாராவி செட்டி லேயே ரகசியமாக ஷூட்டிங் நடத்த டைரக்டர் பா.இரஞ்சி த்தும் தயாரிப் பாளர் தனுஷும் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்தில், நரைத்த தாடி யுடன் கோட் சூட் அணிந்து டான் வேடத்தில் தோன்றினார் ரஜினி.
இப்போது ‘காலா’ படத்திலும் தாடி வைத்து மீசைக்கு மட்டும் டை அடித்து, கோட்டுக்குப் பதிலாகக் கறுப்பு வேட்டி, கறுப்புச் சட்டை அணிந்த டான் வேடத்தில் நடிப்பதாக ஆளாளுக்கு ஆரூடம்,
சொல்லிக் கொண்டு திரிகி றார்கள். ஒரு வேளை ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘காலா’ படத்தின் கதையோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ‘காலா' படத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ‘கபாலி’யின் சாயல் விழுந்து விடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனத்துடன் காலா படத்துக் கான கதை, திரைக் கதையை மெருகேற்றி வருகிறார் இரஞ்சித்.
கபாலியில் இடம் பெற்ற நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும் உரிமை யோடு வாய்ப்பு கேட்க, அத்தனை பேருக்கும் பா.இரஞ்சித் கறாராகச் சொன்ன ஒரே வார்த்தை `ஸாரி'.
ஏற்கெனவே தமிழ் நாட்டில் உள்ள 17 மாவட்ட ங்களில் இருக்கும் ரசிகர் களை, மாவட்ட த்துக்கு தலா 250 ரசிகர்கள் வீதம் சென்னை க்கு வர வழைத்து, மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சந்தித்தார் ரஜினி.
அது போலவே இரண்டாம் பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட
15 மாவட்டங்களின் ரசிகர்களை ஜூன் 15-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை சந்திப்பதற்கு திட்ட மிட்டிருந்தார்.
மும்பை யில் ‘காலா’ படப் பிடிப்பில் பரபரப் பாக நடித்து வருவதால், ஜூன் மாதச் சந்திப்பை ஜூலை 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்த திட்ட மிட்டிருக் கிறார்.
ஏற்கனவே நடந்த சந்திப்பின் போது ‘சைதை’ ரவி மாதிரியான ரசிகர்கள் ஏற்படு த்திய பரபரப்பு போன்று எதுவும் நிகழக் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளு மாறு ரஜினி அறிவுறுத் தியிருக் கிறார்.
ரஜினி ரசிகர் மன்றங் களிடையே பாரபட்சம் ஏதுமின்றி மாவட்ட வாரியாக முறையாக அடையாள அட்டை தருவதற் கான பணி களில் பரபரப்பாக இயங்கி வருகிறார் சுதாகர்.
வழக்க மாக ரஜினியை நேரில் சந்திக்கும் போது ‘தலைவா...’ என்று உணர்ச்சி வசப்படு வதும், ‘அரசிய லுக்கு வாங்க தலைவா..’ என்று ஆக்ரோஷ மாகக் குரல் கொடுப்பதும் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வு.
சென்ற மே மாதச் சந்திப்பின் போது ரசிகர்கள் எல்லோரும் அரசியல் குறித்து எதுவுமே பேசாமல் மௌன மாக இருக்க, ரஜினி தானே முன்வந்து ‘போருக்குத் தயாராக இருங்கள்.
அரசியலு க்கு வருவேன்’ என்கிற அஸ்தி ரத்தை எடுத்து வீசினார். ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியப் பேச்சுக்கு ‘எப்போதும் தன் பட ரிலீஸுக்கு முன்பாக
ரசிகர் களை உற்சாகப் படுத்த எப்போதும் பேசுவது போல் இப்போதும் பேசியிரு க்கிறார்’ என்று கருத்து கந்த சாமிகள் தொலைக் காட்சி களில் தோன்றி பேசினார்கள்.
ஷங்கர் இயக்க த்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரி யில் ரிலீஸா கிறது. அந்தப் படத்துக்கு பிறகே பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா திரைப் படம்’ வெளியாகும்.
`ஆறு மாதங் களுக்குப் பிறகு ரிலீஸாக இருக்கும் தன் படங் களின் வியா பாரத்துக் காக இப்போதே பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை' என்பது,
திரை யுலகப் புள்ளி களுக்குத் தெரிந்த தெளி வான உண்மை. மே மாதத்தில் தனது அரசியல் பிரவேசத் துக்குப் பிள்ளை யார்சுழி போட்ட ரஜினி,
ஜூலை மாத ரசிகர்கள் சந்திப்பில் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடு வதற்குத் தயாராகி வருகிறார்.
`என் தம்பி எப்போ கட்சி ஆரம்பிக்கப் போறார்னு நான் சொல்ல மாட்டேன். அவரே தன் வாயால் ஜூலை மாசம் சொல்வார்’ என்று அர்த்த புஷ்டி யோடு சொல்கிறார் ரஜினியின் அண்ணன் சத்ய நாராயண ராவ் கெய்க்வாட்.
அதுசரி `ரஜினி யின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கட்சித் தலை வர்கள், திரை யுலகப் பிரமுகர்கள் கடுமை யாகத் தாக்கி
விமர்சனம் செய்து வருவதை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார்?' என்கிற கேள்வியை, ரஜினியின் நிழல் நண்பரிடம் கேட்டோம்.
‘`ரஜினி சினிமா வில் என்ட்ரி ஆனப்போ ஏகப்பட்ட டிஸ்கரேஜ். அதை யெல்லாம் தாண்டித் தான் சூப்பர் ஸ்டார் ஆனார்.
இப்போது அரசியல் என்ட்ரி யிலும் அதே நிலை. ரஜினியைக் கடுமை யாகத் திட்டு பவர்களின் வார்த்தைகள், அவரின் செவிகளில் விழாது.
ஏனென்றால், ‘சந்திரமுகி’ விழாவில் அவரே சொன்னது போல ரஜினி, காது கேளாத ஒரு தவளை'’ என்றார்.