உண்மை வாழ்க்கை சினிமா போல இருக்குமா?

3 minute read
காலை 5 மணி. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு மாணவனையும் ஒரு குழந்தையையும் சைக்கிளில் கொண்டு வந்து விட்டு விட்டு அதிவேகமாகச் செல்கிறார் ஒருவர்.
உண்மை வாழ்க்கை சினிமா போல இருக்குமா?
ப்ளாட் பாரத்திலேயே குழந்தைக்குத் தலை சீவி, சோறு ஊட்டி விளையாட்டுக் காட்டுகிறான் மாணவன். மதுரை, செங்கோட்டை பாசஞ்சர் வருகிறது. கூட்டத்தில் குழந்தையோடும் புத்தகப் பையோடும் முண்டியடித்து ஏறுகிறான். 

இடம் கிடைக்கவில்லை. நின்றபடியே ஒரு மணி நேரப் பயணம். விருதுநகர் சந்திப்பு வருகிறது. காத்திருக்கும் ஒருவரிடம் குழந்தையைக் கொடுத்து விட்டு,

ஓட் டமும் நடையு மாகச் செல்கிறான். மூன்று கிலோ மீட்டர் நடந்ததும் பள்ளிக் கூடம் வருகிறது. உள்ளே சென்று மறைகிறான். மாலை குழந்தையைக் கொடுத்த வரிடமே வாங்கிக் கொண்டு, ரயில் ஏறுகிறான்.

இது விருது நகர்-மதுரை சந்திப்பில் தினம் நடக்கும் நிகழ்ச்சி. பள்ளி மாணவன் கையில் புத்தகப்பை சரி, குழந்தை எப்படி? கலங்க வைத்தது கண்ணீர்க் கதை. 

மதுரை களவாசல் சம்மட்டி யாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல். வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம்.

இவர்க ளுக்கு மணி கண்டன், மாரீஸ்வரன், ராஜபாண்டி என்று மூன்று ஆண் பிள்ளைகள். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறை வால் கற்பகம் இறந்து விட்டார். 
பிள்ளை கள் நிலை குலைந்துப் போனார்கள். தாய் இல்லாத அந்தக் குழந்தை களை அரவணைக்க உறவி னர்கள் கூட்டம் உதவிக் கரம் நீட்டி னாலும்,

அது நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. இரண்டாவது மகன் மாரீஸ் வரனை உறவினர் களில் ஒருவர் தத்து எடுத்துக் கொண்டார். 

அது வரை மதுரையில் படித்துவந்த மணி கண்டனை உறவினர் ஒருவர் விருது நகர் ஹாஜிபி செய்யது முகம்மது மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு சேர்த்து விடுகிறார்.

ஆனால், தொடர்ந்து உறவினர் களிடம் மணி கண்டனால் இருக்க முடியாத சூழல். மீண்டும் மதுரைக்கே சென்று விட்டான் மணி கண்டன். ஆனால், விருது நகரில் தான் படிப்பைத் தொடர வேண்டிய நிலை.

அப்பா கூலி வேலை க்குச் செல்வதால் தன்னுடைய தம்பி ராஜ பாண்டியைத் தானே பராமரிக்க வேண் டிய சூழல். 

இதனால் தினமும் தன்னுடைய தம்பி ராஜ பாண்டியை அழைத்துக் கொண்டு விருது நகர் வந்து படித்து விட்டு, மதுரை க்குச் சென்று கொண்டு இருக்கிறான்.

பள்ளிக்கு நேரமாகி விட்டது என்று ஓடிக் கொண்டு இருந்த மணி கண்டனை நிறுத்தி, சில நிமிடங்கள் பேசினேன். ”அம்மா உயிரோட இருக்கு ம்போது, எங்க மூணு பேரையும் நல்லா பார்த்துக்கு வாங்க. 

அப்ப மதுரையில படிச்சுட்டு இருந்தேன். அம்மா இறந்த பின்னாடி அப்பா தான் எங்களைப் பார்த்துக் கிட்டார். ஆனா, அவர் வேலைக்குக் காலையில சீக்கிரமே கிளம்பிப் போகணும். 
ரெண்டாவது தம்பி மாரீஸ் வரனை சொந்தக் காரங்க வீட்டுல விட்டுட்டார். நானும், கடைசித் தம்பி ராஜபாண்டியும் மட்டும் தான். என்னை ஒரு சொந்தக் காரங்க விருதுநகர் ஸ்கூல்ல சேர்த்து விட்டாங்க. 

ஆனா, அவங்க ளால தொடர்ந்து என்னை வளர்க்க முடியலை. அதனால நானே பள்ளிக் கூடம் போய்க் கிட்டே, தம்பியை பார்த்துக் கிறதுனு முடிவு பண்ணி னேன். தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருச் சிடுவேன்.

அப்பா காலை சாப்பாடு ரெடி பண்ணி என்னை யும் தம்பி யையும் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டு வேலைக்குப் போயிடுவார். 

விருது நகருக்கு வர்ற வழியிலேயே தம்பிக்கு இட்லி ஊட்டி விட்ருவேன். விருது நகர் வந்ததும் எங்க பெரியப்பா ராஜ்குமார் கிட்ட தம்பியையும், அவனுக்குக் கொண்டு வந்த சாப்பாட்டையும் கொடுத்துட்டு, ஸ்கூலுக்குப் போயிடுவேன். 

ஸ்கூல் முடிஞ்சதும் திரும்ப ராஜ பாண்டியைத் தூக்கிக் கிட்டு மதுரை போவேன். அந்த டைம்ல அப்பா வந்திருக்க மாட்டார். நானே சாப்பாடு செஞ்சு,

தம்பிக்குக் கொடுத்துட்டு தூங்க வெப்பேன். அப்புறம் வீட்டுப் பாடம் செய்வேன். அம்மா இறந்த போது தம்பி பால் குடியைக் கூட மறக்கலை.
உண்மை வாழ்க்கை சினிமா போல இருக்குமா?
அப்ப எல்லாம் தம்பியைப் பார்த்துக் கிறதுக்கு ரொம்பச் சிரமப் பட்டேன். இப்போ தம்பி நல்லா இட்லி சாப்பிடப் பழகிட்டான். லீவு வந்தா, வீட்டுல தான் இருப்பேன். அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் விளையாடக் கூப்பிடுவாங்க. 

எங்கேயும் போக மாட்டேன். சாயந்தரம் வேலை விட்டு அப்பா வந்ததும் தம்பியை அவருக்கிட்ட ஒப்படைச் சுட்டு அப்புறம் தான் விளையாடப் போவேன்.

தம்பியும் என்னை விட்டு வேற யாரு கிட்டேயும் போக மாட்டான். எங்க பெரியப்பா ராஜ்குமார், சிவகாசியில இருக்கார். ஆனா, தம்பியை வெச்சுக்கி றதுக்காக, சிவகாசியில் இருந்து விருதுநகர் வருவாரு.

அப்புறம் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்லேயே சாயங்காலம் வரைக்கும் தம்பி யைவெச்சு விளையாட்டுக் காட்டுவாரு. அவரு இல்லைனா எனக்கு ரொம்பக் கஷ்டம். 

அது மாதிரி ஸ்கூலில் மதியம் சத்துணவு தான் சாப் பிடுவேன். அப்ப எல்லாம் தம்பி சாப்பிட் டானா இல்லையானு நினைப்பு வந்துடும். 
தம்பி பற்றி நெனைப்பு வர்றப்பலாம் அதை மறக்கிறதுக்காகப் படிக்க, எழுத ஆரம்பிச் சிடுவேன். தம்பிக்கு விளையாட்டுக் காட்டிக்கிட்டே படிக்கிறதால தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க முடியலை. 

இப்போ முதல் அஞ்சு ரேங்க் உள்ளதான் எடுக்குறேன். அப்பாவு க்குப் பெருசா வருமானம் இல்லை. அதனால ஸ்கூல் ஃபீஸ் கட்டவும் யூனிஃபார்ம் எடுக்கவும் சிரமமா இருக்கு. 

தம்பி கொஞ்சம் வளர்ந் துட்டான்னா நானும் சாயங் காலம் ஏதாச்சும் வேலை க்குப் போயி டுவேன். ராஜ பாண்டியைப் பணம் கொடுத்து தத்து எடுத் துக்கிறேன்னு ஒருத்தர் கேட்டு வந்தார்.

என்ன கஷ்டமா இருந்தாலும், தம்பி என் கூடத் தான் இருக்க ணும்னு தோணுச்சு. அதனால முடியாதுனு சொல் லிட்டேன். நல்லாப் படிச்சு முன்னேறி, தம்பியை நல்ல படியா வளர்க்கணும் சார். 

எப்படி யாவது கஷ்டப் பட்டுப் படிச்சு முன்னேறி என் தம்பிகளை வளர்த்து ஆளாக் கணும். தம்பியைத் தூக்கி சுமக்குறது கூட பெரிய கஷ்டமா இல்லை. 

கொஞ்ச நாள் முன்னாடி விருது நகர் ரயில்வே ஸ்டேஷன்ல கொஞ்சம் அண்ணன் மாருங்க குடிச்சிட்டு என்னையும், என் தம்பியையும் கிண்டல் பண்ணி, என்னை அடிச்சு, கைல இருந்த காசை எல்லாம் புடுங்கிட் டாங்க.
உண்மை வாழ்க்கை சினிமா போல இருக்குமா?
அன்னை க்குத் தம்பிக்கு எதுவும் வாங்கித் தர முடியலை. பசியில ரொம்ப நேரம் அழுது க்கிட்டே இருந்தான். 

என்னை அடிச்ச அண்ணா… என்னைப் பார்த்தா உங்களு க்குப் பாவமா இல்லையா? எங்களை ஏன் தொந்தரவு பண்றீங்க?” கேட்டு முடிக்கும் போதே மணி கண்டனின் கண் களில் இருந்து வழிகிறது கண்ணீர்.
Tags:
Today | 21, January 2025
Privacy and cookie settings