உலகச் சுற்றுச் சூழல் தினம்... நடிகர் சல்மானுக்கு திட்டுச் சூழல் தினம் !

ஜூன் 5-ம் தேதி உலகச் சுற்றுச் சூழல் தினம். ஆனால், நடிகர் சல்மான் கானுக்கு அது திட்டுச் சூழல் தினமாகி விட்டது. விஷயம் இது தான்.
உலகச் சுற்றுச் சூழல் தினம்... நடிகர் சல்மானுக்கு திட்டுச் சூழல் தினம் !
சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார பைக்கு களை அறிமுகப் படுத்திப் பேசிய சல்மான் கான், ‘‘வேகமாப் போகா தீங்க... சிக்னலை மதிங்க.. சாலை ஒன்றும் ரேஸ் ட்ராக் கிடையாது. 

உங்களுக்கு ஆபத்து என்றால் பரவா யில்லை. உங்களால் அடுத்தவர் களுக்குச் சிக்கல் வராமல் பார்த்துக் கோங்க!’

என்று அட்வைஸ் மழை பொழிய, விஷயம் அறிந்த நெட்டி சன்கள் சோஷியல் மீடியாக் களில் பொங்கி எழுந்து விட்டது தான் இப்போது வைரல் மழை.

மான் வேட்டை, பாதசாரியை காரில் ஏற்றிக் கொன்ற வழக்கு என்று சில வழக்கு களில் சிக்கி யிருக்கும் சல்மான் கானுக்கு, சமூக நலத்தில் ஆர்வம் அதிகம்! 

இதற்காகவே ‘பீயிங் ஹ்யூமன்’ எனும் தொண்டு நிறுவன த்தை நடத்தி வருகிறார். 2007-ல் தொடங்கப் பட்ட இந்தத் தொண்டு நிறுவனம் மூலம், ஆதரவற் றோருக்குக் கல்வி, 

இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை கிராமங் களுக்கு சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவது என்று சில நல்ல காரியங் களைச் செய்து வந்தார்.

சுற்றுச் சூழல் தினத்தைச் சும்மா விட முடியாதே! அதனால், ஒரு மிகப் பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்தது ‘பீயிங் ஹ்யூமன்’ தொண்டு நிறுவனம். 
இதில் தான் கறும்புகை கக்காத, காற்றை மாசு படுத்தாத எலெக்ட்ரிக் சைக்கிள் களை அறிமுகம் செய்து ‘குளோபல் வார்மிங்’ பற்றிப் பேசி, பலரது வார்னிங் குகளுக்கு ஆளாகி விட்டார் சல்மான்.

சுற்றுச்சூழல் தான் உலகைக் காக்கும் முக்கிய அம்சம். சாலை களில் வாகன ங்கள் ஏற்படுத்தும் மாசு பற்றி உங்க ளுக்கே தெரியும். 

சுற்றுச் சூழல் மாசுவை விட, வாகனம் ஓட்டும் போது சிலர் கடைப் பிடிக்கும் மோசமான விஷய ங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கி விடும். 

சாலையை சிலர் ரேஸ் ட்ராக்போல் பயன் படுத்துகி றார்கள். நீங்கள் ரேஸ் ஓட்ட வேண்டு மென்றால், ரேஸ் ட்ராக்கு க்குச் செல்லுங்கள். 

உங்களால் அடுத்தவர் களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.’’ என்று அட்வைஸ் மழை பொழிய, நெட்டி சன்கள் விழித்துக் கொண்டார்கள்.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்: 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி மும்பை பாந்த்ரா மலைச் சாலையில் வேகமாக கார் ஓட்டி வந்த சல்மான் கான், 
நிலை தடுமாறி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்னும் பேக்கரி க்குள் காரை பார்க் செய்தார். இதில், நடை பாதையில் படுத்திருந்த ஒருவர் பரிதாப மாக இறந்து போனார். 

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். ‘குடித்து விட்டு வாகன த்தை ஓட்டிய தால் தான் இந்த விபத்து’ என்று சல்மான் கான் மேல் வழக்கு போடப் பட்டது. 

இதில் சல்மானு க்கு 5 ஆண்டு சிறைத் தண்ட னையும், 25,000 ரூபாய் அபராத மும் விதித்து தீர்ப்பு சொல்லியது உள்ளூர் கோர்ட். 

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற த்தில் மேல் முறையீடு செய்த சல்மான் கான், போதிய ஆதாரங்கள் இல்லை என்று இந்த வழக்கில் இருந்து வெற்றி கரமாக விடுதலை யானார்.

இந்த ஃப்ளாஷ் பேக்கை ஓட்டிப் பார்த்த நெட்டி சன்கள், ட்விட்டரில் கடுப்பாகி விட்டார்கள். 

குடிச்சுட்டு ஸ்பீடா வண்டி ஓட்டிய உங்களுக் கெல்லாம் சாலைப் பாதுகாப்பு பற்றிப் பேச அருகதையே இல்லை! என்கிற ரீதியில் விமர்ச னங்கள் வந்து குவிந்தன.

ஹிட்லர், உலக அமை தியைப் பற்றிப் பேசுவது போல் இருக்கிறது சல்மான் கானின் அறிவுரை!
உலகச் சுற்றுச் சூழல் தினம்... நடிகர் சல்மானுக்கு திட்டுச் சூழல் தினம் !
வனவிலங்குப் பாதுகாப்பு குறித்து சல்மான் அறிவுரை கூறுவது போல் இருக்கிறது, அவரின் சாலைப் பாதுகாப்பு விழிப்பு உணர்வு!

வங்கிக ளுக்குக் கடனைத் திரும்பச் சரியாகச் செலுத்துவது எப்படி என்று விஜய் மல்லையா பாடம் நடத்துவது போல் இருக்கிறது உங்கள் அறிவுரை!உச்ச கட்டமாக ஒருவர், சல்மான் கான் கருத்துச் சொல்ல வில்லை. 

அவர் நடிப்பு கற்றுத் தந்தார்! என்று கிண்டலாகக் கூறிய ட்வீட்டைப் பார்த்து, 'என்னடா இது மும்பைக் காரனுக்கு வந்த சோதனை' என்று நூடுல் ஸாகிக் கிடக்கி றாராம் சல்லுபாய்.
Tags:
Privacy and cookie settings