இளம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி களித்த சிவகார்த்திகேயன் !

இளம் சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்து பேசியவருக்கு, அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று பதலளித்துப் பேசினார் சிவகார்த்திகேயன்.
இளம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தட்டி களித்த சிவகார்த்திகேயன் !
நடிகர் தம்பி ராமையா வின் மகன் உமாபதி நாய கனாக நடிக்கும் 'அதாகப் பட்டது மகா ஜனங்களே' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை யில் நடை பெற்றது. 

சிவகார்த்தி கேயன் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இவ்விழா வில் பேசிய தயாரிப்பாளரும், 

நடிகர் விஜயின் முன்னாள் பிஆர்ஓ- வான பி.டி. செல்வ குமார் தன்னுடைய பேச்சில் சிவகார்த்தி கேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப் பிட்டார். 

இயக்குநர் பேரரசு பேசும் போது சிவகார்த்தி கேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய சிவ கார்த்திகேயன் நிறைய படங்களில் தவற விட்டது 'வேலைக்காரன்' படத்தில் நடந்து விட்டது. 

தம்பி ராமையா சாருடன் நடித்து விட்டேன். அவர் விடாமுயற்சி எல்லோரு க்கும் ஒரு சிறந்த உதாரணம். 

அவர் வயதை என்றைக்குமே வெளியே காட்டிக் கொள்ளாமல், தன்னை மட்டுமே நம்பிப் போராடி ஜெயித்துக் கொண்டி ருக்கிறார். அவருடைய அன்புக் காக மட்டுமே இங்கு வந்துள்ளேன். 

இந்த மேடையில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பேசி எனக்கொரு அதிர்ச்சியைக் கொடுத்தவர் பி.டி .செல்வகுமார் . அவர் என்ன சொன்னார் என்பதை என் வாயால் சொல்லவே மாட்டேன். 
அதெல்லாம் எனக்கு வேண்டாம். பேரரசு சார் பேசும் போது நான் சினி மாவைப் புரிந்து கொண்ட தாகச் சொன்னார். 

ஆனால், நான் வாழ்க் கையைப் புரிந்து கொண்டேன். எங்கியிருந்து வந்திருக்கிறேன் என்பது தெரியும். அதெல்லாம் புரிந்துள்ளதால், யார் என்ன பேசி னாலும் காதில் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

நாம் என்ன வேலை செய்கி றோமோ அது அனைவ ரிடமும் போய் சேர்ந்தால் போது மானது. ஆகையால் இந்த தலைப்பு எல்லாம் வேண்டாம். 

நீங்கள் இந்தத் தலைப்பு கொடுத் தீர்கள் என்பது, அதற்குள் செய்தி தலைப் பாக வந்து விட்டது. எனக் கென்று ஒரு வழி எடுத்து, அதில் போய் கொண்டே இருக் கிறேன். 

என்னுடைய படம் அனைவ ருக்கும் பிடித்தி ருந்தால் சந்தோஷம். அதில் விமர்சனம் வரும் போது, திருத்திக் கொண்டு வேறு மாதிரி செய்யப் பார்ப்போம். 

கண்டிப் பாக, திரை யுலகம் என்பது ஒரு கடினமான துறை தான். சினிமாவில் ஜாக்கிர தையாக இருப்பா என்று சொன் னார்கள். முதல் 2 வருடங்கள் எனக்கு தெரிய வில்லை. 
ஆனால், கடைசி 2 வருடங்களில் தெரிந்து விட்டது. போட்டி நிறைந்த துறையில் அப்படித் தான் இருக்கும். அதெல்லாம் நினைத்தோம் என்றால் ஏறி போக முடியாது.

கே.எஸ். ரவிகுமார் சாரிடம் பேசும் போது, 'முத்து' படத்தை 45 நாட்களில் முடித்தோம் என்றார். எனக்கும் 45 நாட்களில் ஒரு படத்தை முடிக்க ஆசை யாகத் தான் இருக்கிறது. 

ஆனால், 100 நாட் களாகி விடுகிறது. தற்போது படங்கள் 25 நாட்கள் ஓடினால் வெற்றி என்பதால், படப் பிடிப்பை 100 நாட் களாக்கி விட்டோம். 

இனிமேல் வரும் இயக்குநர் களுக்கு குறைந்த நாட்களில் படப்பிடிப்பு செய்வது எப்படி என்பதை கே.எஸ்.ரவிகுமார் வகுப்பு எடுக்க வேண்டும்.
நிறைய பேர் பாராட்டி பேசினார்கள். அவர்க ளுடைய பாராட்டைக் கேட்கும் போது, இன்னும் பத்தாதுடா ஓடு என்பது மட்டும் தோன்றிக் கொண்டே இருக் கிறது" என்று பேசினார் சிவ கார்த்திகேயன்.
Tags:
Privacy and cookie settings