மாரடைப்பில் விழுந்த பெண்னுக்கு 28 லட்சம் அபராதம் !

சீனா போன்ற நாடுகளில், கண்ணாடி சாமான் கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், சில கடுமையான விதி முறைகள் பின்பற்றப் படுகின்றன.

மாரடைப்பில் விழுந்த பெண்னுக்கு 28 லட்சம் அபராதம் !
பொருட் களை வாங்க மற்றும் பார்க்க வரும் வாடிக்கை யாளர்கள், அவற்றை உடைத்து விட்டால், அவற்றின் விற்பனை விலை என்னவோ, அதை, அபராத மாக செலுத்த வேண்டும்.

இப்படித் தான், சீனாவின், யுனான் மாகாண த்தில் உள்ள ரூய்லி நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்ற பெண், 

கண்ணாடி யால் செய்யப் பட்ட, 'பிரேஸ்லெட்' டை, கையில் எடுத்து, பார்க்க, திடீரென, அந்த பொருள், கைதவறி கீழே விழுந்து, உடைந்து விட்டது.

இதன் விலை, சில ஆயிரம் ரூபாயாக இருக்கும் என, அலட் சியமாக இருந்த அந்த பெண், அதன் விலையை கேட்டதும், மயங்கி, கீழே விழுந்து விட்டார்.
அந்த, 'பிரேஸ்லெட்' டின் விலை, 28 லட்சம் ரூபாய். மயக்க மடைந்த சிறிது நேரத் திலேயே, அந்த பெண்ணுக்கு மாரடைப் பும் ஏற்பட்டு விட்டது. 

மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டு, அவர் குண மடைந்து வந்ததும், அபராத தொகை யான, 28 லட்சம் ரூபாயை, கறாராக, அவரிட மிருந்து வசூலித்து விட்டனர், அக்கடை உரிமை யாளர்கள்.
Tags:
Privacy and cookie settings