ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கை களுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாக தகவல்கள் வெளியானது.
காஷ்மீரில் அமைதி யின்மை ஏற்பட்ட போது பிரிவினை வாதிகள் பயங்க ரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்க ளுக்கு வழங்கிய தாகவும், இளைஞர் களைவன் முறைக்கு தூண்டிய தாகவும் தகவல்கள் வெளியானது.
இது தொடர்பான விசார ணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), கடந்த மாதம் பிரிவினைவாத இயக்க தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது.
இந்த சோதனை யில், ரூ.2 கோடி பணம், லஷ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப் பட்ட பயங்கர வாத இயக்கங் களிடன் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல் கள் சிக்கின.
அத்துடன் பிரி வினை வாத இயக்க தலைவர் கிலானி யின் மருமகன் அல்டாப் அகமது ஷா உள்ளிட்ட தலைவர் களை வீட்டுக் காவலில் வைத்து தொடர்ந்து விசா ரணை நடத்தினர்.
விசாரணை க்குப் பின்னர் கிலானி யின் மருமகன் அல்டாப் அகமது ஷா, தெஹ்ரீக் - இ - ஹரியத் செய்தித் தொடர் பாளர் அயாஸ் அக்பர், பீர் சபியுல்லா, மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமை யிலான
ஹரியத் மாநாட்டு கட்சியின் செய்தி தொடர் பாளர் ஷாகித் அல் இஸ்லாம், மெஹ்ரஜுதின் கல்வாபல், நயீம் கான் ஆகியோரை என்ஐஏ அதிகா ரிகள் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப் பட்ட 7 பேரும் டெல்லி மாவட்ட நீதி மன்ற த்தில் இன்று ஆஜர் படுத்தப் பட்டனர். அப்போது அவர் களை 18 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசா ரணை நடத்த அனுமதி கேட்டு அதிகா ரிகள் மனு தாக்கல் செய்தனர்.
காஷ்மீ ரில் பயங்கர வாத செயல் களில் ஈடு படுதல் மற்றும் பயங்கர வாதத்தி ற்கு நிதி அளித்தல் தொடர் பான குற்றச் சாட்டு குறித்து விசா ரணை நடத்தி ஆதாரங் களை சேகரிக்க வேண்டும்.
அவர்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று என்ஐஏ வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், ஏற்கனவே என்ஐஏ விசாரணை நடத்தி விட்டதால் காவலில் அனுப்பக் கூடாது என்று குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இது தரப்பு வாதங்க ளையும் கேட்ட மாவட்ட நீதிபதி பூனம் ஏ பம்பா, கைது செய்யப் பட்ட 7 பேரையும் 10 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரி க்கும்படி உத்தர விட்டார்.