ஒரே ஒரு ட்வீட்... சினிமாக் காரர்களை பரபரப்படை வைத்து விட்டது. இயக்குநர் பிரபு சாலமன் பெயரில் வந்திருந்தது அந்த ட்வீட்.
சமாச்சாரம் இது தான்....நடிகை ஒருவரின் சம்பளம் மற்றும் இதர பேட்டா வசதிகள் குறித்தும் ஆனால் குறைவான நேரமே அவர் நடிப்ப தாகவும் குற்றம் சாட்டி போடப்பட்ட ட்வீட் அது.
அந்த நடிகைக்கு ஒரு நாளைக்கு ரூ. 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா 5 மணி நேரம்தான் நடிப்பாங்க...
கிரேட் லெஜன்ட் டோட பொண்ணு அவர்... என்று அந்த ட்வீட்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. பிரபு சாலமனின் ட்விட்டர் பக்கத்தில் இது வெளியாகி யிருந்தது.
இதனால் அந்த ட்விட்டில் குறிப்பிடப் பட்டுள்ள நடிகை யார் என்று எல்லோரும் கேட்க ஆரம்பி த்தனர். லெஜன்ட் பொண்ணு என்றால் ஸ்ருதி ஹாஸன் தான் என்று பலரும் கூறி வந்தனர்.
உடனே இதற்கு மறுப்புத் தெரிவித் துள்ளார் பிரபு சாலமன். ட்விட்டரில் தனக்கு அக்கவுண்டே இல்லை என்று அவர் கூறி யுள்ளார்.
ட்விட்டரில் நேரத்தைப் போக்கவோ, அதைக் கவனிக் கவோ கூட எனக்கு நேரமில்லை. கும்கி 2-ல் பிஸியாக உள்ளேன் என்று அவர் கூறி யுள்ளார்.