பசுவை அடித்து தூக்கிய அமித்ஷா கார் !

ஒடிஷாவில் சாலையில் போய்க் கொண்டிருந்த பசுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் அடித்து தூக்கியது. 
பசுவை அடித்து தூக்கிய அமித்ஷா கார் !
ஒடிஷா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதன் கிழமை ன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். 

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பசுமாடு மீது அமித்ஷாவின் பாது காப்புக்கு சென்ற கார் ஒன்று படுவேகமாக மோதியது.

காயமடைந்த பசு

இதில் பசுமாடு படுகாய மடைந்தது. நாடு முழுவதும் பாஜகவினர் பசுக்களைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு அராஜ கங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதமோதல்
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொலை செய்கிற சம்பவங்கள் நடை பெறுகின்றன. 

அண்மையில் பழனியில் விவசாயத்துக்கு மாடுகளை கொண்டு சென்ற விவசாயி ஒரு வரிடம் வம்பு செய்து மத மோதலை உருவாக்கி யிருந்தனர்.

பிஜூ ஜனதா தளம்

இந்த நிலை யில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வின் பாது காப்புக்கு சென்ற வாகனமே சாலையில் சென்ற பசுவை அடித்து தூக்கியி ருக்கிறது. இந்த விவகாரத்தை ஒடிஷா பிஜூ ஜனதா தளம் கையிலெடுத்து விளாசி வருகிறது.

விளக்கம்

அதே நேரத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக மூத்த தலைவர் பிரதாப் சாரங்கி, அமித்ஷாவின் பாதுகாப்புக்கு வந்த வாகனம் தான் மோதியது. 
உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தோம். அவரும் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க உத்தர விட்டார். 

போலீசாரும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பசுமாட்டுக்கு சிகிச்சை அளித்தனர் என விவரித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings