பெங்களூரு சிறையில் சலுகைகள் !

1 minute read
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வழங்க லஞ்சம் கொடுக்கப் பட்டதாக பரபரப்பு புகாரை எழுப்பினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
பெங்களூரு சிறையில் சலுகைகள் !
சிறைத் துறை டிஜிபிக்கு சசிகலா தரப்பு 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கி யுள்ளதாக வும் சசிகலா வுக்கு சிறை யில் விஐபிக ளுக்கான சலுகை கள் வழங்கப் படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. 

ஆனால் இதனை சிறை நிர்வாகம் மறுத்து வந்த நிலை யில், ரூபாவின் இந்தப் புகார் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர் பாக ரூபா பட்டிய லிட்டுள்ள குற்றங்கள் இவை தான்.

சசி கொடுத்த ரூ.2 கோடி லஞ்சம்

சசிகலா வுக்கு விஐபி சலுகை களை வழங்க சிறைத் துறை டிஜிபிக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறப் பட்டது. 

இதன் மூலம் சசிகலா வுக்கு சிறப்பு சமைய லறை அமைத்து கொடுக் கப்பட் டுள்ளது. மற்றும் விஜபிக் களுக்கு வழங்கப் படும் சிறப்பு சலுகை கள் வழங்கப் பட்டுள்ளன.
முத்திரைத் தாள் மோசடி கைதி தெல்கிக்கு விஜபி மசாஜ்

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைது செய்யப் பட்டு சிறை யில் இரு க்கும் அப்துல் கரீம் தெல்கிக்கு சிறப்பு மசாஜ் சிறையில் செய்யப் படுகிறது. 

அவருக்கு மசாஜ் செய்வ தற்கும் அவரது வீல்சேரை தள்ளுவ தற்கும் 4 உதவியா ளர்கள் நியமிக் கப்பட்டு ள்ளனர். அவர் அங்கு ராஜ மரியாதை யுடன் நடத்தப் படுகிறார்.

சிறையில் கஞ்சா

சிறை யில் கஞ்சா மற்றும் போதை பொருள் பயன் படுத்தப் படுகிறது. இது தொடர் பாக 25 கைதி களை ஆய்வு செய்ததில் அவர் களில் 18 பேர் போதை பொருள் பயன் படுத்துவது தெரிய வந்து ள்ளது.
தவறாக பயன் படுத்தப்படும் ஆவண காப்பக அறை

கைதிகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் அறை தவறாக பயன் படுத்தப் படுகிறது. ஆவணங்கள் வைக்கப் பட்டுள்ள அறையில் கைதிகள் வேலை செய்கிறார்கள். 

இதனால் முக்கிய ஆவணங்கள் தவறாக பயன் படுத்தப்படு கின்றன.
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings