கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் அரியர் முறை ரத்து !

அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் இந் தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுக மாகிறது. மேலும் அரியர் முறை ரத்து செய்யப் படுகிறது.
கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் அரியர் முறை ரத்து !
பொறியியல் படிப்புகான பாடத்திட்டத்தை அண்ணாப் பல்கலைக் கழகம் நான்கு ஆண்டு களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகிறது. 

அதன் படி தற்போது உள்ள பாடத் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது. 

இந்த நிலை யில் பொறி யியல் படிப்புகான புதிய பாடத் திட்டத்தை அண்ணாப் பல்கலைக் கழகம் இந்தாண்டு முதல் அறிமுகப் படுத்தி யுள்ளது.

இந்த கல்வி யாண்டில் முதலா மாண்டு சேரும் மாணவர் களுக்கு இந்த பாடத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. மேலும் 2017-18 கல்வி யாண்டு முதல் 'அரியர்' முறை ரத்து செய்யப் படுகிறது. 
படிப்பில் மந்த மாக இருக்கும் மாண வர்கள், ஒரு பருவ த்தில் இரண்டு பாடங் களைக் கை விட்டு விட்டு தேர்வு எழுத அனுமதி க்கப்படு வார்கள்.

அதே போல மாணவர் எல்லா பாடங்களிலும் தேர்வு எழுதி ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட பாடங் களில் தோல்வி யடைந்தால், 

தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின் போது எழுத அனுமதிக்கப் படமாட்டார்.

மாறாக, அவர் தோல்வி யடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகி றதோ, அப்போது தான் அவரால் எழுத முடியும். 
மேலும் படிப்பில் சிறந்து விளங்கும் மாண வர்கள் அடுத்த பருவத் தேர்வுக் கான 2 பாடங் களை முந்தைய தேர்வின் போதே கூடுத லாக சேர்த்து எழுத அனுமதி க்கப்படு வார்கள்.

படிப்பில் சிறந்து விளங்கும் மாணவகள் மூன்றா ண்டுகளுகு பிறகு உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ பணி செய்ய அனுமதிக் கப்படு வார்கள்.
Tags:
Privacy and cookie settings