சென்னையை நெருங்கும் ஆபத்து !

உலகம் வெப்ப மயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்கள் கடலில் முழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை நெருங்கும் ஆபத்து !
ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பாட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பருவநிலை மாற்றம் குறித்த ஆய் வினை மேற் கொண்டனர் .

இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி தகவ ல்கள் வெளியாகி யுள்ளனர். உலகம் வெப்ப மயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக பசிபிக் 

மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப் போவதாகவும்  குறிப்பாக சீனா, இந்தியா, வங்க தேசம் 

மற்றும் இந்தோனேசி யாவில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பருவ நிலை மாற்றம் காரண மாக இந்தியா உள்ளிட்ட நாடுகளை அதிக வெப்பம், அதிகப் படியான மழை, புயல் தாக்கங்கள் அதிக ளவில் இருக்கும் என்று விஞ்ஞா னிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் உலகம் வெப்ப மயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் காரணமாக கடலிலுள்ள பனிக் கட்டிகள் உருகும் . 
இதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்து இந்தியாவி லுள்ள சென்னை, கல்கட்டா, மும்பை போன்ற பெரு நகரங்கள் கடலில் முழ்கும் அபாயம் ஏற்பட்டு ள்ளதாக வும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வினை மெய்ப் பிக்கும் வகையில் இரண்டான் டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த்தது. அதே போல கடந்த ஆண்டு வரலாறு காணாத வற்ட்சி ஏற்பட்டது. 

இந்தநிலையில் வருங் காலங்களில் இதே விட பல மடங்கு பாதிப்புகள் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings