நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப்பை சிக்க வைத்த ரகசிய செல்போன் குறித்து வெளிவராத பரபரப்பு தகவல்கள் வந்துள்ளன.
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் பலாத் காரம் செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப் பட்டார்.
திலீப், இந்த வழக்கில் சிக்கியது மலையாள நடிகர்கள் மத்தியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு பாவனா கடத்தலில் உள்ள தொடர்பை போலீசார் கண்டு பிடித்தது, திகில் படங் களில் வரும் சம்பவத்தை மிஞ்சும் அளவுக்கு இருந்த தாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்காக அவர்கள் தனியாக திரைக் கதை எழுதி அதில் சில நபர் களை நடிக்க வைத்து கண்டு பிடித்த பரபரப்பு தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம்:-
பாவனா கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில் முதலில் எந்த தகவலை யும் போலீ சாரிடம் தெரிவிக்க வில்லை.
பணத்திற் காக மட்டுமே கடத்தியதாக தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் உண்மை இல்லை என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.
இதற்காக பல்சர் சுனிலின் நண்பர் ஒருவரை இன்னொரு வழக்கில் கைது செய்த போலீசார் அவரை போலீ சாரின் ரகசிய உள வாளியாக மாற்றினர்.
பின்னர் அந்த உள வாளியை பல்சர் சுனில் அடைக்கப் பட்ட அறையில் தங்க வைத்தனர்.
அந்த உளவாளி பல்சர் சுனிலுடன் பேசி, பேசி அவரது நம்பிக் கையை பெற்றான். இதற்கே இரண்டு, மூன்று வாரங்கள் ஆகி விட்டது.
அதன் பிறகு மெதுவாக பாவனா, விவகாரம் பற்றி பேசினார். அப்போது தான் இந்த வழக்கில் வெளி வராத பல உண்மை களை பல்சர் சுனில் கொட்டி னார்.
அந்த தகவல் களை உளவாளி போலீ சாரிடம் தெரிவித் தான். அதன் பேரில் திலீப் மற்றும் அவரது மானேஜர் அப்புண்ணி, தயாரிப் பாளர் நாதிர்ஷா
மற்றும் திலீப்பின் 2-வது மனைவி காவ்யா மாதவன், அவரது தாயார் ஆகியோரின் செல்போன் தொடர் புகள் கண் காணிக்கப் பட்டன.
மேலும் அவர் களின் வீடுகள், நிறுவன ங்கள், கடை களிலும் ரகசிய சோதனை நடத்தப் பட்டது. ஆனால் இதில் எதுவும் பெரிதாக சிக்க வில்லை.
இதன் மூலம் திலீப் மற்றும் அவரை சார்ந்த வர்கள் மட்டும் யாரு க்கும் தெரியா மல் தொடர்பில் இருப்பதை புரிந்து கொண்டனர்.
அந்த தொடர்பு எப்படி? நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற் கொண்டனர்.
அப்போது தான் ஜெயிலு க்குள் இருந்த பல்சர் சுனில் வெளியில் இருக்கும் முக்கிய நபரை தொடர்பு கொள்ள வழியில் லாமல் தவிப்பது போலீ சாருக்கு தெரிய வந்தது.
அவர்கள் உளவாளி மூலம் பல்சர் சுனிலுக்கு ஒரு செல் போனை வழங்கினர். போன் கிடைத் ததும் அவன், ரகசியமாக சில எண்களை தொடர்பு கொண்டு பேசினார்.
அந்த எண்கள் யாருடை யது என்பதை போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்கரா உத்தர வின் பேரில் கண்டு பிடிக்க ஏற்பாடு செய்யப் பட்டது.
இதில் அந்த செல்போன் நம்பர் நடிகர் திலீப் வைத்தி ருந்த ரகசிய செல்போன் எண் என தெரிய வந்தது.
அந்த நம்பரை போலீசார் கண் காணிக்க தொடங்கினர். இதில் தான் திலீப் ஜெயிலில் இருந்த பல்சர் சுனிலிடம் பேசியது, காவ்யா மாதவனு டன் ரகசிய மாக பேசியது ஆகியவை தெரிய வந்தது.
அந்த பேச்சுக் களை டிரேஸ் அவுட் செய்த போலீசார் அதன் அடிப்படை யிலேயே திலீப்பை ஆலுவா போலீஸ் கிளப்பு க்கு வர வழைத்து 13 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை யின் போதுதான் திலீப் பொறியில் அகப்பட்ட எலி போல மாட்டிக் கொண்டார். ரகசிய செல்போன் மூலம் பாவனா வுக்கு எதிராக அவர் செய்த சதி, கடத்தல் உள்ளிட்ட தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்த போலீசார் மொத்தம் 19 சாட்சியங்களை திரட்டினர். அவை அனைத்தையும் கோர்ட்டில் சமர்ப்பித்து திலீப்பை கைது செய்யும் உத்தரவை பெற்றனர்.
இதற்கு வியூகம் வகுத்து கொடுத்த டி.ஜி.பி. லோக்நாத் பெக்கரா வுக்கு வாழ்த்து க்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அவரை கைது செய்த போலீசார் திலீப் மீது 11 பிரிவு களில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 342 (சட்ட விரோத மாக அடைத்து வைத்தல்), 366 கடத்தல், 376டி கூட்டு மான பங்கம், 411 திருட்டு பொருட் களை வைத்தி ருத்தல், 506(1) குற்றம் செய்ய தூண்டுதல்,
201 தடயங் களை அழித்தல், 212 குற்ற வாளிக்கு ஆதர வாக இருத்தல், அவரை பாது காத்தல், 34 ஒரே திட்டத் துடன் சேர்ந்து குற்றம் செய்தல்,
120 (பி) சதி, 66 (இ) சுய உரிமையை மீறுதல், 67 (ஏ) ஆபாச படங் களை தயாரித்தல் ஆகிய 11 பிரிவு களில் வழக்கு போடப் பட்டுள்ளது.
இந்த குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டால் திலீப்புக்கு 20 ஆண்டு கள் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படு கிறது.