பிரபல திரைப்பட இயக்குனரான அசிஷ் அவிகுந்தக் கோல்கட்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு நேற்று நடிகை தேவலீனா சென்னுடன் சென்றார்.
அப்போது அவிகுந்தக் வேட்டி அணிந்து இருந்தார். இதைப் பார்த்த வணிக வளாகத்தின் காவலாளிகள் அவரை மட்டும் நுழைய விடாமல் தடுத்தனர்.
பாதுகாப்பு காரணங் களுக்காக வேட்டி அணிந்தவர்கள் இங்கே நுழைய அனுமதி கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் இந்த சம்பவம் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கண்டன த்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், பேண்ட், சட்டை அணிபவர்கள் மட்டுமே தனியார் பொழுது போக்கு விடுதிகளுக்குள் அனுமதிக்கப்படும் என்ற ஆங்கிலேயர் கால கலாசாரம் இன்றும் இருப்பது தெரிந்த விஷயம்.
ஆனால், பாதுகாப்பு காரணங் களுக்காக வேட்டி அணிந்து சென்றால் வணிக வளாகத்துக்குள் அனுமதி கிடையாது என்பதை முதல் முறையாக இப்போது தான் கேள்விப் படுகிறேன்.
நல்ல வேளையாக நான் ஆங்கிலத்தில் விவாதித்து என்னை யார் என்று அடையாளப் படுத்திக் கொண்டதால் வணிக வளாக நிர்வாகிகள் உள்ளே செல்ல அனுமதித்தனர்.
கோல்கட்டா இவ்வளவு மோசமாகி விடும் என்று நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.