இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் விதிமுறைகள் 1980ன் படி, 26/01/1989 தேதியிலும் அதற்கு பின்பும் பிறந்தவர்கள் தங்கள் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது கீழ்க்கண்ட எதையும் சமர்பிக்க அனுமதிக்கப் பட்டுள்ளது.
பள்ளி மாற்றுச் சான்றிதழ் / பிறந்த தேதி உடனான கல்விச் சான்றிதழ், பான்கார்டு, ஆதார் கார்டு / இ - ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,
எல்.ஐ.சி பாலிசி பத்திரம் அரசு ஊழியர்களாக இருந்தால் பணி அனுபவச்சான்று, ஓய்வூதியச் சான்று உள்ளிட்ட வற்றை அளிக்க லாம்.
பாஸ்போர்ட் தொடர் பாக நாடாளு மன்றத் தில் எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங், இந்த நடவடி க்கை மூலம் லட்சக் கணக்கா னோர் இனி எளிதில் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ள லாம்.
அனாதை குழந்தைகளாக இருந்தால், அவர்கள் தங்கியுள்ள ஆதரவு இல்லத்தில் இருந்து பிறந்த தேதிக்கான சான்று அளிக்க வேண்டும்.
மேலும் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 8 வயதுக்கு கீழ் உள்ளவர் களுக்கு பாஸ்போர்ட் கட்டணத்தில் 10% சலுகை அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, பெற்றோரில் ஒருவரின் பெயரை மட்டும் அளித்தால் போதும்.
பாஸ்போர்ட் விண்ணப் பத்துடன் இணைக்கப்படும் சான்று கள் 15லிருந்து 9ஆக குறைக்கப் பட்டுள்ளது. திருமண மானவர்கள் திருமணச் சான்று அளிக்க வேண்டிய தில்லை.
மேற்கண்ட விதிமுறைகள் கடந்த டிசம்பர் 2016ல் இருந்து செயல்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.