லாாியில் துப்பட்டா சிக்கியதால் பெண் பலி !

சேலத்தில் லாாியில் துப்பட்டா சிக்கியதால் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த இளம் பெண் பாிதாபமாக உயிாிழந்தாா். சேலம் மாவட்டம் பாண்டியராஜன் பகுதியை சோ்ந்தவா் இந்துமதி (வயது24).
லாாியில் துப்பட்டா சிக்கியதால் பெண் பலி !
டிப்ளமோ முடித் துள்ள இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3–ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்றது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் அயோத் தியாப் பட்டணத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு இந்துமதி தனது தாயாருடன் மொபட்டில் சென்றுள்ளார். 

நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக இந்துமதி மட்டும் மொபட்டில் சேலம் வந்து கொண்டிருந்தார். இவர் சேலம் உடையாப்பட்டி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழி யாக கேரளா விற்கு இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. மொபட் அங்குள்ள வேகத் தடையில் ஏறி இறங்கும் போது 

இந்து மதியின் துப்பட்டா லாரியின் பக்க வாட்டில் இருந்த கொக்கி யில் சிக்கியது. இதனால் மொபட்டில் இருந்து நிலைத் தடுமாறி கீழே விழுந்த அவர் லாாியின் சக்க ரத்தில் சிக் கினார்.
இதனால் தலை, கை, கால் களில் பலத்த காயம் ஏற்பட்டு இந்துமதி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த அம்மா பேட்டை காவல் துறையினா் அங்கு விரைந்து சென்றனர். 

பின்னர் அவர்கள் இந்து மதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையில் தகவல் கிடைத்ததும் அவருடைய உறவினர்கள் மற்றும் அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் என ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக அம்மா பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து லாரியின் டிரைவாிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணம் நிச்சயிக்கப் பட்ட பெண் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings