பயங்கர பொறுப்பான பையன், மொத்த சிலபஸையும் சிறு மூளைக்குள் அடக்கிய படிப்பாளிப் பெண் என வித்தியாசமான காம்போ அவர்களுடையது. போலவே காதலும். அவுட்டிங், டேட்டிங் என சுற்றியதில்லை.
மணிக் கணக்கில் அரட்டை இல்லை. அவர்கள் தோள் உரசி நடந்து நாங்கள் பார்த்த தில்லை. opposite poles attract each other என்பதை பிஸிக் கலாய் உடைத் தெறிந்தவர்கள்.
மொத்தமே ஐந்து நிமிட உரையாடல்கள் தான் அவர்களுடையது. அந்த ஐந்து நிமிடங்களுக்கான எரி பொருளாய் காதல் மட்டுமே இருக்கும். கண்ணியமான காதலுக்கும் குடும்பம் தானே எதிரி.
கடைசி செமஸ்டரில் ஒரு நாள் திடீரென அவளுக்கு திருமணமாக, வெற்றுப் பார்வையும் விரக்தி நடையுமாய் மிச்ச நாட்களை கழித்தான். பின் ஆளுக் கொரு திசையில் சிதறிப் போனோம்.
ஒரு நாள் அதிகாலையில் அறைக் கதவை தட்டியவன் குழந்தை பொறந்தி ருக்குடா அவளுக்கு என அத்தனை நாள் வலி மறந்து சந்தோஷக் கண்ணீர் விட்டான்.
எதிர்பால் ஈர்ப்புடையவனாய் இருந்தும் அவனை அணைத்து முத் தமிடத் தோன்றியது. பள்ளிக் காலத்தி லிருந்தே பழக்கமான துடுக்கான தங்கை அவள். செல்ல மாய், வாய் பேசும் வானரம்.
ஆனால் அப்பா என்றால் சர்வமும் நடுங்கும் அவளுக்கு. முரட்டு உடம்பும் முறுக்கு மீசையுமாய் அவரைப் பார்த்தால் எனக்கே கிட்னி ஓவர்டைம் பார்க்கும். அவரை மீறி அவள் ஏதாவது செய்தால் கன்னம் தக்காளி சாஸ்தான்.
ஆனால் பின்னாளில் தான் ஒருவனை விரும்பு வதாய் அவள் சொன்ன போது அந்த முரட்டு மீசைக் காரர் மேடியாய் மாறி ஆசிர் வாதித்தார். பாவம், அவருக் குள்ளும் முற்றுப் பெறாத ஒரு கடலோரக் கவிதை இருக்கிறது போலும்.
எனக்கும் அவனுக்கும் எதிலுமே ஒத்துப் போனதில்லை. வார்த்தை கள் வெடித்து பீப் சாங் பிச்சை கேட்குமளவிற்கு உரையாடி யிருக்கிறோம். ஆனால் அவன் காதலுக்கு முதல் ரசிகன் நான்.
'அவளுக்கு மியூசிக் பிடிக்கு மாம்டா, கத்துகிட்டு இருக்கேன் என்பான் ஒரு நாள். மற்றொரு நாள், ஈ கொச்சு ஜீவிதம் பிரேமிச்சு தீர்க் கணும் சாரே என்பான்.
அவளுக்கு மலை யாளமும் பிடிக்கும் போல. அவளுக் காக அவன் எடுக்கும் சிரத்தை களை பார்க்கும் போதெல் லாம் காதல் மேல் காதல் கொள் கிறேன்.
குடும்பத்தில் எல்லாருக்கும் செல்லப் பிள்ளை அந்த அக்கா. பிரியமும் குறும்பு மாய் தேவதையைப் போல வளைய வந்தவள் ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி
காதல் திருமணம் செய்து கொண்டாள். தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் காட்சி யாய் மொத்த குடும் பமும் சுற்றி நின்று 'நாசமாப் போவ' என வாழ்த்தியது. இன்று அவள் வருகை தரும் விஷேச வீடுகளில் எல்லாம், நாங்க பாத்து வச்சு ருந்தாக் கூட இப்படி ஒரு
தங்கமான மாப்பிள்ளை கிடைக்க மாட்டா ரும்மா' என தூற்றிய வாய்களே வாழ்த்தும் போது பதிலுக்கு அவளின் எதிர் வினை ஒரு சின்ன புன்னகை மட்டுமே.
எனக்கோ அது க்ளை மேக்ஸில் சித்தார்த் அபிமன்யூ காட்டும் சைகையாய் தெரிகிறது. எப்படியோ அவள் புண்ணி யத்தில் எனக்கு பாரீனி லிருந்து மறக்காமல் வாங்கி வரும் பாசக்கார மாமா கிடைத்தி ருக்கிறார்.
* இந்த கேரக்டரை நீங்களும் கடந்து வந்திருப் பீர்கள். 'மரத்துல இருக்குது காயீ, தூங்கத் தேவை பாயீ' டைப் காதல் கவிஞன் அவன்.
'நீ எழுதுறது எல்லாம் கவிதையா?' என நான்கு தலை முறையை தோண்டி எடுத்துத் திட்டி னாலும் அசராமல் அவளைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கி றான்.
'நீ எழுதுறது எல்லாம் கவிதையா?' என நான்கு தலை முறையை தோண்டி எடுத்துத் திட்டி னாலும் அசராமல் அவளைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கி றான்.
என்றாவது ஒருநாள் அதிசய மாய் எனக்கும் பொருந்திப் போகும் படி அவன் எழுதுகை யில் 'you made my day dude'என சொல்ல நினைத்து லைக் அமுக்கு கிறேன். இதோ இப்போது சொல்லியு மாயிற்று.
கனவுத் தொழிற் சாலையை கனவாகக் கொண்ட நண்பன் அவன். ஸ்டிரி க்டான ஹைஸ் கூல் டீச்சர்களின் மூத்த மகன். தோளுக்கு மீறிய வனை அடிக்கக் கூடாது என்பதெல்லாம் அவன் அப்பாவிற்கு கட்டுக் கதை.
அடிகளையும், சுடுசொற் களையும் வாழ்க்கை யாய் கொண்ட வனுக்கு வரமாய் வந்த guardian angel அவள். 'நீ சினிமாவுல் ட்ரை பண்ணு, உன்னை நான் பாத்துக் குறேன்' என அவனையும் அவன் கனவையும் சேர்த்தே சுமந்தாள்.
கொஞ்ச நாட்க ளுக்கு முன் அவனை சந்தித்த போது, 'போதும் மச்சி. எனக்காக நிறைய பண்ண அவளுக்கு என்னால தர முடிஞ்சது இந்த விடுதலையை தான். I loved her enough to let her go.
என்னைக் காவது நான் படமெடுத்தா புதுசா லவ் சீன்லாம் யோசிக்க வேணாம்ல... அதோட லவ் சீன் எல்லாம் அவதான் என்றான்.
இப்போது அவளின் திருமண த்திற்கு ஒரு பார்வை யாளனாய் செல்ல காத்திரு க்கிறான். விண்ணைத் தாண்டும் அவனின் படைப் பிற்காக நான் காத்திரு க்கிறேன்.
இப்போது அவளின் திருமண த்திற்கு ஒரு பார்வை யாளனாய் செல்ல காத்திரு க்கிறான். விண்ணைத் தாண்டும் அவனின் படைப் பிற்காக நான் காத்திரு க்கிறேன்.
இந்த யுகத்து அல்ட்ரா மாடர்ன் காதல் கதை இது. 'live the moment' என்ற கொள்கைப் படி வாழும் நெருங்கிய தோழி அவள். வசதி, சாதி, மதம் என எப்படிப் பார்த் தாலும் பொருந்தாக் காதல் அவர்க ளுடையது.
ஆனால் லாஜிக் இல்லாத கலர்புல் காட்சி களைக் கொண்ட ஷங்கர் படம் தானே காதல்.
தீராக் காதலில் திளைத் தார்கள். வில்லனாய் வந்தது ரியாலிட்டி. 'எதிர் பாத்தது தானே. லவ் நாங்க ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்டது. we are best as couple.
தீராக் காதலில் திளைத் தார்கள். வில்லனாய் வந்தது ரியாலிட்டி. 'எதிர் பாத்தது தானே. லவ் நாங்க ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்டது. we are best as couple.
ஆனா கல்யாணம் நிறையப் பேரு சம்பந்தப் பட்டது. யாரையும் கஷ்டப் படுத்த விரும்பல' என பொறுப் பான போதிமரமாய் பாட மெடுத்தாள்.
அவன் திருமண த்தில் எல்லா வேலை களையும் இழுத்துப் போட்டு செய்தாள். 'ஐயாம் ஆல்ரைட் மச்சு' என பார்க்கும் போதெல் லாம் சொல்கி றாள் ஒரு மென்சோக ஹைக் கூவாய். உண்மை அவள் தலை யணைக்கே வெளிச்சம்.
முன்னே சொன்ன தற்கு அப்படியே நேரெதிர் கதை இது. இணைய த்தின் வழியே பரிச்சய மானார்கள். இலக்கியம் வழியே நெருக்க மானார்கள். மார்க்ஸ் ஜென்னி யாய் தங்களை உருவகப் படுத்திக் கொண் டார்கள்.
காதல், காமம், இன்ன பிற எல்லா வற்றையும் எழுத்தின் மூலம் தீர்க்க முயல்கி றார்கள். அவர் களின் கடிதத்தை படிக்கை யில் என்னுடையது காதல் சூழ் உலகா கிறது.
ஒரு மழை நாளின் பின்னிரவில் அருந்தும் சூப்பைப் போல கத கதப்பைத் தரும் கடிதங்கள் அவை. நிற்க.
இது நாள் வரை அவர்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது என்பது தான் அந்த சூப்பில் தூவப் படும் பெப்பராய் மேலும் 'கிக்' ஏற்றுகிறது.
இது நாள் வரை அவர்கள் நேரில் பார்த்துக் கொண்டது கிடையாது என்பது தான் அந்த சூப்பில் தூவப் படும் பெப்பராய் மேலும் 'கிக்' ஏற்றுகிறது.
'இதென்ன பைத்தியக் காரத்தனம்' என்பவர் களுக்கும் பரிசாய்த் தர அவர் களின் கடிதத் தின் ஒரு பகுதி இருக்கிறது. படித்த பின் நியாயம் உணர்ந்து நிச்சயம் நீங்களும் காதலில் விழுவீர்கள்.
அப்பா இல்லாத குடும்ப த்தின் ஒரே ஆண்மகன். பொறியி யலோடு மேற் படிப்பாய் ஊதாரி, ரவுடி என பல பட்டங்கள் வாங்கி யவன். அடிஷனல் தகுதி யாய் ஒருத்திக்கு காதலன்.
ஒரு கட்டத் தில் தன் அக்கா வின் திருமணமா? தன் காதலா? என்ற நிலை வரும் போது அவன் தேர்ந் தெடுத்தது முதலா வதை. 'பிடிச்ச வங்க கண்ணைப் பாத்து குட்பை சொல்ற தெல்லாம் ரொம்ப கொடுமைடா'
என அவன் சினிமாத் தனமாய் போதை யில் புலம்பும் போதெல் லாம் தடுக் காமல் கேட்டுக் கொண்டே இருக்கி றோம்.
இது எதுவுமே தெரியாமல் 'அவனுக்கு இன்னும் பொறுப்பே வரலைப்பா' என எங்களிடம் புலம்பு கிறார் அவனின் அம்மா.
இது எதுவுமே தெரியாமல் 'அவனுக்கு இன்னும் பொறுப்பே வரலைப்பா' என எங்களிடம் புலம்பு கிறார் அவனின் அம்மா.
எல்லாம் நீ இருக்கிற நம்பிக்கை தான். நாளைக்கு எனக்கு பிரச்னைன்னா நீ வந்து நிப்பேல எனும் தங்கை யின் சொற்கள் தான் உள்ளாடை களைக் கூட பத்திர மாய் பார்த்துக் கொள்ளத் தெரியாத என்னை பொறுப் பாளியாக் குகிறது.
இதோ, இதை டைப்பிக் கொண்டிருக்கும் இதே நொடியில் முடிந்து போன பக்கங் களை புரட்டிப் பார்க்க பஞ்சாப் கிளம்புகிறான் நண்பன் ஒருவன். 'நாளைக்கு பேசுறேன், குட்நைட் என அவள் சொல்லிய போது எனக்குத் தெரிந்திருக்க வில்லை
நாளை பேச அவள் இருக்கப் போவ தில்லை என. பிரக்ஞை இல்லா வெளியில் சுற்றிக் கொண்டிருந் தவனை இழுத்துப் பிடித்து இருத்தியது
இவர்கள் தம் தீராக் காதலின் வழி சிதறித் தெறிக்கும் துணுக் குகள் தான். கார்ப னுக்கு சமமாய் காதலையும் பரப்பும் உங்கள் அனைவ ருக்கும் ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். லவ் யூ ஆல் மக்களே!