காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மனித மோதல் என்பது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. விளை பொருட்களை சேதப்படுத்தும் காட்டு விலங்குகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும்
என்று விவசாயி கள் கோரிக்கை வைப்பதும், வன விலங்குகள் வசிக்கும் மலைக் காடுகள் பகுதியில் வசிக்கும் விவசாயி கள் மிருகங்கள்
சாப்பிடாத பயிர் களை விளை விக்க முயற்சி எடுக்க வேண்டும்! என்று சூழலிய லாளர்கள் வலியுறுத் துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் ஒரு வேடிக்கை ஆண்டாண்டு காலமாக மலை யிலும், அம்மலை சார்ந்த பகுதி யிலும், காட்டு மிருகங் களோடு வாசம் செய்யும் பழங் குடிகள் மத்தியில் இந்தக் குரல்கள் எழுவதே யில்லை.
காட்டு மிருகங் களுடன் வாழும் இவர்களது வாழ்க்கையே வேடிக்கை யானது. அவற்றை கேட்டாலே சுவா ரஸ்யம் பொங்கும்.
அப்படித் தான் மலைக் காட்டுக்குள், ஒற்றைக் குடிசையில் வசிக்கும் இந்த வாழைப் படுகை தங்கராஜ் - ருக்குமணி யின் நெகிழ்ச்சி யான அனுபவ த்தைக் கேட்க நேர்ந்தது.
கோவை மாவட்டம், எட்டிமடை பேரூராட் சிக்கு உள்ளட ங்கியது அய்யம்பதி பழங் குடியினர் கிராமம்.
பிற்கால சோழர்கள் வரலாற்றில் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக் கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந் தார்கள்.
இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப் பட்டது. இதன் எச்சம் இந்தப் பழங் குடியின கிராமத்தை மலைக் கணவாய் ஒட்டித் தான் செல்கிறது.
இன்றைக்கு மனிதர்கள் யாரும் செல்ல முடியாத காடு அடர்ந்த பிரதேச மாக விளங்கும் இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய் கூட்டம், ராஜநாகம் என சகல வன விலங்குகளும் ஜீவிக் கின்றன.
இதை யொட்டி யுள்ள அய்யாசாமி மலையில் வாழ்ந்த இருளர் இனப்பழங் குடிகள் அரசு அதிகாரி களின் வேண்டு கோளை ஏற்று 40 ஆண்டு களுக்கு முன்பு இந்த அடிவாரப் பகுதிக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.
வெறும் தொகுப்பு வீடுகள் இடிபாடு களுடன் காணப்படும் அய்யம்பதி கிராமத் தில் இருளர் இனக்குடும் பங்கள் வசிக் கின்றன.
ஆடு, மாடு, கோழி வளர்ப்பும், கூலி வேலையும் தான் இவர்கள் ஜீவனம் என்றாலும் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இவர்கள் கிராம த்தை மிரட்டத் வறுவ தில்லை.
தினம் தோறும் ஒற்றை யானைகள் முதல் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் வரை இந்த ஏரியா வில் வலம் வருவது வாடிக்கை.
ரயிலில் அடிபட்டு பரிதாப மாக இறக்கும் யானைகள் பற்றிய நிறைய செய்திகள் அறிந்திரு க்கிறோம்.அந்த சம்ப வங்கள் பெரும் பாலும் இப்பகு தியை சுற்றி நடை பெற்றவை தான்.
இப்படிப் பட்ட அய்யம்பதி கிராமத்தி லிருந்து சுமார் 1 கி.மீ. தொலை வில் உள்ளது உட்கண்டித் தோட்டம் என்கிற வாழைப் படுகை.
இங்கு ஒற்றை யடிப் பாதை யில் ஒற்றை குடிசை. அதில் குழந்தை களுடன் தன்னந் தனியே வாழ்ந்து வருகி றார்கள் இந்த ருக்குமணி - தங்கராஜ் தம்பதிகள்.
'அய்யம் பதியில் அரசாங்கம் கொடுத்த வீடு சுத்தமா இடிஞ்சு போச்சு. அதனால 10 வருஷ த்துக்கு முன்னால இங்கே வந்து குடிசை போட்டோம்.
அப்பயி ருந்து இப்ப வரைக்கும் இந்த குடிசைக்கு யானைகள் வராத நாளே இல்லை.
அப்படி வந்தாலும் இந்தக் குடிசையில் ஒற்றை ஓலையை அது தொட்ட தில்லை!' என எடுத்த எடுப்பில் சொல்லி வியப் பூட்டினார் ருக்குமணி.
'இதா இந்த மரத்த டியில தான் இங்கே சுத்தற ஒத்தை யானை எப்பவும் வந்து நிற்கும். தண்ணி ஏதாச்சும் பாத்தி ரத்துல, பக்கெட்டுல வச்சா குடிக்கும். அங்கே இருக்கிற மூங்கில அப்படி இப்படி உரசிப் பார்க்கும்.
நான் இதே திண்ணை யில தான் உட்கார்ந் துட்டு உனக்கு என்னடா வேணும். நானும் உன்னை மாதிரி தானே?
தன்னந் தனியா போக்கிடம் இல்லாம இங்கே வந்து குழந்தை குட்டி களோட உட்கார்ந் துட்டே இருக்கேன். என்கிட்ட என்ன இருக் குன்னு வந்து எங்கிட்ட நிக்கி றேன்னு கேப்பேன்.
அதுல அது என்ன புரிஞ்சு க்குமோ? ஒரு பிளிறு பிளிறீட்டு, தும்பி க்கைய தூக்கி ஓர் ஆட்டு ஆட்டீட்டு ஓடும் பாருங்க. எனக்கே ஆச்சர் யமா இருக்கும்.
அப்படி ஓடறவன் அந்தப் பக்கம் இருக்கிற ரயில் ரோட்டை தாண்டி ஓடும் போது எனக்கே பயமா இருக்கும். எங்கே ரயில் வந்து டுமோ, அந்த ஒற்றை யன் சிக்கிக்கு வானோன்னு திக்கு, திக்குனு அடிச்சுக்கும்.
அப்படித் தான் அது வந்து போகும். ரெண்டு மூணு தடவை அது ரயில்வே லைன் ஓரம் போகும் போது ரயிலும் வந்திருக்கு. டேய்..
போகாதீடா. ரயில்ல மாட்டிக் காதடான்னு இங்கே யிருந்தே கத்துவேன். அதுக்கு புரிஞ்ச மாதிரி அங்கேயே நின்னு க்கும். ரயில் போனதும் அப்புறம் ரயில்வே லைனை கடந்து ஓட்டம் பிடிக்கும் பாருங்க. ஓட்டம்.
அதைப் பார்க்கவே ஆயிரம் கண் வேணும். இதை நான் பலபேரு கிட்ட பல தடவை சொல்லி யிருக்கேன். யாருமே நம்ப மாட்டாங்க.
யானை களோட என்ன தான் பழகி னாலும் எப்பவும் பயம் உள்ளுக் குள்ளே இருந் துட்டே இருக்கும். போன வருஷம் ஒரு நாள் சாயங் காலம் 7 மணி இருக்கும். ஆடெல்லாம் ஓட்டிட்டு வந்து பட்டியில அடைச் சுட்டேன்.
கிழக்கால திரும்பி பார்த்தா மொசு, மொசுன்னு ஆட்டு மந்தைக மாதிரி புழுதி கிளப் பிட்டு யானைகள் கூட்டம். எங்க குடிசையை பார்த்துத் தான் அத்தனையும் வருது.
நான் அப்பத் தான் வந்து படுத்தி ருந்த என் புருஷனை கூப்பிடறேன். அதா அங்கே பாரு. எத்தனை யானைக வருது. பட்டாசு வெடிச்சுப் போடு. அந்தப் பக்கம் போகட்டும்னு சொல்றேன். அவரு காதுல போட்டுக்கல.
இந்நேரத்து க்கு எங்கே யானை கள்னு கேட்டுட்டே வந்தவர் வெளியே வந்து பார்த்துட்டு பதறிட்டார். ஒரு ஓலை வெடிய தீயை பத்தி வீசினார். உடனே அத்தனை யும் திசை மாறிப் போச்சு.
மொத்தம் 21 யானைகள். அப்புறம் என்ன தோணுச்சோ, ரயில் ரோட்டு க்கு அந்தப் பக்கம் இருக்கிற தென்னந் தோப்புல மொத்தம் 170க்கு மேல தென்னை மரங்களை உடைச்சு, தாம்பு கட்டிடுச்சு.
அதோட நூத்துக் கணக்குல வாழை களும் நாசம். அது மாதிரி சேதம் அதுக்கு முன்னா டியும் யானை கள் பண்ணின தில்லை; பின்னாடி யும் செஞ்ச தில்லை.
அன்னை க்கு எட்டிமடை ஊருக் குள்ளே கோயில் திருவிழா. வான வேடிக்கை பட்டா சுன்னு அமர்க் களமா இருந்துச்சு.
அதுல பயந்து போன யானை கள் தான் அத்தனை யும் கோபமா போய் தென்னந் தோப்பை யும், வாழைத் தோட்டத்தை யும் நாசம் பண்ணிடுச் சுன்னு ஜனங் களே பேசிட் டாங்க.
இவ்வளவு ஏன்? போன வாரம். என் பையன். 6-ம் வகுப்பு படிக்கி றான். பக்கத்துல உள்ள கரட்டு மேட்டுக்கு போயிருக் கான்.
அங்கே புளிய மரத்துல புளியங் காய் நிறைய காய்ச்சு தொங் கிருக்கு. அதை பறிச்சு வீட்டுக்கு வரலாம்ன்னு மரத்துல ஏறி புளியங் காய்களை உதிர்த்து கீழே போட்டிருக்கான்.
கீழே போடப்போட புளியங் காய்களை காணோம். என்னடா ன்னு பார்த்தா மரத்துக்கு கீழே ஒரு குட்டி யானை. புளியங் காய்களை இவன் போடப் போட பொறுக்கிப் பொறுக்கி தின்னுட்டே இருந்தி ருக்கு.
இவன் பயந்துட்டு கீழேயே வராம இருக்க, அதுவும் புளியங் காய் பூராவும் பொறுக்கித் தின்னுட்டு அந்தப் பக்கம் போயிடுச்சு. இவனும் இந்தப் பக்கம் இறங்கி ஓடி வந்திருக் கான்.
இப்படி யெல்லாம் யானை களும், நாங்களும் ஒண்ணாவே வாழ்ந்து பழகிட் டோம். ஒரு நாள் கூட என் குடிசையில் ஒரு ஓலையை பிரிச்சதி ல்லீங்க!' என்று சொல்லி நெகிழ்ந் தார் ருக்குமணி.