ஆர்எஸ்எஸ் மேடையில் பேசியே தீருவேன்... விசு !

1 minute read
ஆர்எஸ்எஸ் மேடைகளில் யார் தடுத்தாலும் நான் பேசுவேன் என்று இயக்குநரும் நடிகருமான விசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ஆர்எஸ்எஸ் மேடையில் பேசியே தீருவேன்... விசு !
சீதாராம் சுவாமி என்பவர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற் கொண்டு அதனை நாகர் கோவிலில் முடித்துக் கொண்டார். அதை விழாவாக நடத்திய ஆர் எஸ் எஸ் அமைப்பு கொண்டாடியது. 

அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திரைப்பட இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் , " நாட்டைச் சுற்றி சாலை அமைத்து அதற்கு பாரதமாதா சாலை என்று பெயரிட வேண்டும் " என்று கூறினார். 

பின்னர் பேசிய திரைப்பட இயக்குநர் விசு கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் இந்த விழாவில், நான் கலந்து கொள்ள கூடாது என்று சிலர் எதிர்ப்புக் காட்டினர். 

நான் கன்னியா குமரிக்கு போகிறேன். அங்கு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி யில் கலந்து கொள்கிறேன் என்றதும், ஏன் சார் நீங்க போறீங்க... டிவி பத்திரிகை எல்லாம் பாக்கிற தில்லையா? என்று கேட்டனர். 
ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேசுவதை எல்லாம் கவனிப்ப தில்லையா என்றும் கேட்டனர் என்னிடம். நான் அவர்க ளிடம் கூறினேன். எனக்கு 73 வயதா கிறது. 

இந்த வயதில் எனக்கு முடி வெடுக்க தெரியாதா? கண்டிப் பாக நான் ஆர் எஸ் எஸ் மேடை க்குப் போவேன். பேசுவேன் என்று தெரிவித்தார்.
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings