ஒரு மாணவனின் விடுப்பு கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பள்ளிக்கு விடுப்பு எடுக்க விரும்பும்
மாண வர்கள் "ஐ யம் சப்பரீங்க் ஃப்ரம் பீவர்" என்று தான் காலம் காலமாக எழுதி வருகிறார்.
ஆனால் இந்த மாணவர் எழுதியி ருக்கு கடிதம் சற்று வித்தியாச மானது. தேனி மாவட்டம் பூசணி யூத்து அரசு பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன்,
தனது ஆசிரி யருக்கு விடுப்பு கடிதம் எழுதியிருந்தான். அந்த கடித்தை பிரித்து படித்து பார்த்த ஆசிரியர் நெகிழ்ந்து விட்டார்.
காரணம் அந்த மாணவர் விடுப்புக் காண உண்மை காரணத்தை அந்த கடித்ததில் எழுதியிருந்தான்.
அந்த மாணவனின் கடித்ததில், என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கால் நடைகளை பார்த்துக் கொள்ள வேண்டி யுள்ளது
இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று ஈஸ்வரன் என்ற அந்த மாணவன் எழுதியிருந்தான்.
இந்த கடித்தின் மூலம் அந்த மாணவனின் நேர்மையும், கால் நடைகள் மீது அவன் வைத்திருக்கும் பற்றும் புலனாகி இருக்கிறது என்று நெட்டிசங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சமூகம் கால் நடைகளுக்கு எவ்வளவு முக்கியதுவம் அளிக்கிறது என்பதை அந்த மாணவனின் கடிதம் மூலம் அறிந்து கொள்ளலாம். தற்போது இந்த கடிதம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.