சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் !

பெங்களூரு சிறையில் சிறப்புச் சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டு மல்லாமல், மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டி யுள்ளார்.
சசிகலாவிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் பட்டியல் !
கர்நாடக‌ முன்னாள் முதல்வரும், மஜத மாநில தலைவருமான குமாரசாமி நேற்று பெங்களூருவில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு ள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. 

டிஐஜி ரூபா டி. மவுட்கில் தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.

பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக் கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர் கதையாகி வருகிறது. 

சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை. மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கி யுள்ளனர். 
சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரி டமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கு கின்றனர்.

இந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப் போது வெளியாகி இருக்கிறது. தற்போது ஆதாரத் தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா டி. மவுட் கில் மீது துறை சார்ந்த குற்றச் சாட்டை எழுப் புவது நியாயம் அல்ல. 

உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப் பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர் புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். 

அப்போது தான் இந்த விசா ரணை யால் உண்மையைக் கண்டறிய முடியும். இல்லா விட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங் களையும் அழித்து விடு வார்கள். 

சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில‌ ஆதா ரங்கள் கிடைத் துள்ளது. 

தேவைப் பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லா விட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
என்னை மட்டும் குறி வைக்கக் கூடாது: ரூபா

டிஐஜி ரூபா டி.மவுட்கில் கூறும் போது, “நான் காவல் துறை விதி முறை களையும், சிறைத் துறையின் சட்ட திட்டங் களையும் மீற வில்லை. 

நான் குற்றவாளி அல்ல. ஒரு அதிகாரி யாக சிறையை பார்வை யிட்டு உயர் அதிகாரி க்கு அறிக்கை அளித்தேன். நான் முதலில் ஊடகங் களிடம் போய் பேச வில்லை. 

டிஜிபி சத்திய நாராயண ராவ் தான் முதலில் ஊடகங் களிடம் பேசினார். சசிகலா விடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிறப்புச் சலுகை அளித்த விவகார த்தில் என்னை மட்டும் குறி வைப்பது நியாயம் அல்ல. 
இந்த விவகார த்தில் அனைவர் மீதும் நியாய மான‌ நடவடி க்கை எடுக்க வேண்டும். என் மீது மட்டும் நடவடி க்கை எடுக்கக் கூடாது. 

நான் காவல் துறை யின் விதி முறை களையும், சட்ட திட்ட‌ங் களையும் மதிக் கிறேன். உயர்மட்ட விசாரணை க்கு தயாராக இருக் கிறேன்” என்றார்.
Tags:
Privacy and cookie settings