டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்த தாயும், குழந்தையும் உயிரிழப்பு !

புதுவையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப் பட்ட பெண்ணும், அவருக்குப் பிறந்த 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பமடைந்த தாயும், குழந்தையும் உயிரிழப்பு !
புதுவை முத்திரை யர்பாளை யம் வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் என்ஜி னீயர் விக்னேஷ் (27). இவருடைய மனைவி திவ்யா (24). 

இவரும் என்ஜினீயர் தான். விக்னேஷ் மற்றும் திவ்யா இருவரும், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்நிலையில், இவர்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக டெஸ்ட் டியூம் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். 

இதற்காக சிகிச்சையை மேற் கொண்டார் திவ்யா. இதையடுத்து கர்ப்பிணியான திவ்யாவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து புதுவையின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பிரசவத் திற்காக அனுமதிக்கப் பட்டார். ஆனால், திவ்யாக்கு, ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி யுள்ளனர். 
அதையடுத்து ஆபரேஷன் மூலம் 2 பெண் குழந்தைகள் பிறந்தது. சிறிது நேரத்திலேயே தியாவும், அவருக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், அதிர்ச்சியடைந்த திவ்யாவின் உறவினர்கள், மருத்துவர்களின் தவறான சிகிச்சையின் காரணமாகத் தான் திவ்யாவும், 

அவருக்குப் பிறந்த 2 பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறி மருத்துவ மனையை முற்றுகை யிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த லாஸ்பேட்டை போலீசார் மருத்துவமனை க்கு வந்து திவ்யாவின் உறவினர் களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அதன் பின்னர் திவ்யா மற்றும் அவருடைய 2 பெண் குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து 

இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2வது நாளான நேற்றும் திவ்யாவின் உறவினர்களும், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வர்களும் திவ்யா மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த 

தனியார் மருத்துவ மனையையும், திவ்யாவுக்கு சிகிச்சை அளித்த மருத்து வர்களையும் முற்றுகை யிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவ லறிந்த வடக்குப் பகுதி போலீசார் மற்றும் லாஸ் பேட்டை போலீசார் ஆகியோர் திவ்யா உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings