ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி ஓட்டு போட வருவாரா?

அரசியல் நிகழ்விற்காக 11 மாதங்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் கருணாநிதி ஓட்டு போட வருவாரா?
திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வரும் அவரை கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.

தொடர் சிகிச்சையில் இருந்து வரும் அவரை முக்கிய பிரமுகர்கள் மட்டும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிப் பதற்காக நாளை (ஜூலை 17) கருணாநிதி வீட்டி லிருந்து வெளியே வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 11 மாதங் களுக்கு பிறகு அவர் மீண்டும் அரசியல் நிகழ்வுக்கு திரும்ப உள்ளது குறிப்பிடத் தக்கது. 
கருணாநிதி வாக்களிக்க வாய்ப்புகள் இருந்தாலும், டாக்டரின் அறிவுரைப் படி அவர் ஓட்டளிக்க வருவது குறித்து நாளை காலையே முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப் படுகிறது.

இத்த கவலை திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவி த்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings