துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய ராணி... சுவாரசிய சம்பவம் !

திருமண மண்டபத்தில் காதலனை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற இளம் பெண் அவரையே கரம் பிடித்தார்.
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய ராணி... சுவாரசிய சம்பவம் !
உத்தர பிரதேச மாநில த்தைச் சேர்ந்தவர் அசோக் யாதவ். அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி னார். வர்ஷா சாகு என்ற இளம் பெண்ணை காதலித்தார். இருவரும் 8 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந் துள்ளனர். 

இந்நிலை யில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவ தாக அசோக் கூறி யுள்ளார். அதை வர்ஷா ஏற்க வில்லை.

அதையும் மீறி குடும்ப த்தினர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அசோக் சம்மதித் தார். பண்டல்கண்ட் பகுதி யில் உள்ள மவுதகா என்ற இடத்தில் கடந்த மே மாதம் 15-ம் தேதி திருமணம் நடப்ப தாக இருந்தது. 

அப்போது திடீரென மண்டப த்துக் குள் அதிரடி யாக நுழைந்த வர்ஷா, அசோக் தலையில் துப்பாக் கியை வைத்து மிரட்டினார். 

பின்னர் அவரை கடத்திச் சென்றார். அந்த சம்பவத் துக்குப் பின், வர்ஷாவு க்கு ‘ரிவால்வர் ராணி’ என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.
பின்னர் 48 மணி நேரத்து க்குப் பின்னர் இரு வரும் பண்டா பகுதி யில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. 

இந்நிலை யில், கான்பூரில் இருந்து 65 கி.மீ. தொலை வில் உள்ள ஹமிர்பூர் மாதா சவுரா கோயிலில், அசோக் - வர்ஷா திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக நடை பெற்றது. 

பாங்கரா நடனம், மேள, தாளத் துடன் நடந்த திருமண த்தில் நூற்றுக் கணக் கான உறவினர் களும் நண்பர் களும் பங்கேற் றனர். ஆனால், அசோக்கின் பெற்றோர் கலந்து கொள்ள வில்லை.

இது குறித்து வர்ஷா கூறுகை யில், ‘‘சந்தோஷ த்தில் இருக்கி றேன். இந்த நாளுக் காக நான் பல போராட்ட ங்களை சந்தித்து விட்டேன். அசோக்கை கடத்தி திருமண த்தை நிறுத்த கஷ்டப்பட் டேன். 

அதன் பின் அவரை ஹமிர் பூர் மாவட்ட சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் கொண்டு வர போரா டினேன்’’ என்றார்.
இதற்கி டையில் திருமணம் நின்று போன தால், மண்டபத் தில் அதிர்ச்சி அடைந்த மணப் பெண்ணின் தந்தை லாலு யாதவ் போலீஸில் புகார் அளித்தார். 

அதன் அடிப்படை யில் அசோக்கை போலீஸார் கைது செய்து சிறை யில் அடைத் தனர். ஆனால், அசோக்கை ஜாமீனில் எடுக்க அவரது பெற்றோர் முன் வர வில்லை. 
 
அத்துடன் கடத்திச் சென்ற வர்ஷா மீதும் புகார் தெரிவிக்க வில்லை. அதன் பின், வர்ஷா வின் முயற்சி யால் கடந்த 7-ம் தேதி சிறையில் இருந்து வெளி யில் வந்தார் அசோக். 
 
அங்கு காத்தி ருந்த வர்ஷா, அசோக்கை அழைத்துச் சென்றார். அதன் பின், உள்ளூர் சிவசேனா கட்சிதான் இருவரின் திருமண த்துக்கும் விருந்து க்கும் ஏற்பாடு செய்தி ருந்தது.
உ.பி. மாநில சிவசேனா தலைவர் ரத்தன் பிரம்மச்சாரி, ‘ரிவால்வர் ராணி’ என்ற அமைப் பையே அறிவித்து விட்டார். 

இந்த அமைப் பின் தலைவ ராக வர்ஷா இருப்பார். காதல னால் ஏமாற்றப் படும் பெண்களு க்கு இந்த அமைப்பு உதவும்’’ என்று அவர் அறிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings