ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் களுக்கான தகுதித் தேர்வில் பங்கேற்ற வீரமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளுக் கான ‘டி’ டைப் வினாத் தாளில் கேள்வி எண் 107-ல் வந்தே மாதரம் என்ற பாடல் எந்த மொழி யில் முதலில் எழுதப்பட்டது?
என கேட்கப் பட்டு இருந்தது. அதற்கு நான் வங்க மொழி என பதில் அளித்து இருந்தேன். ஆனால் கீ-ஆன்சரில் சமஸ் கிருதம் என உள்ளது.
அனைத்து பாடப் புத்தகங் களிலும் வந்தே மாதரம் வங்க மொழி யில் எழுதப் பட்டது என்று தான் உள்ளது.
இதனால் இந்த தேர்வில் 89 மதிப்பெண் பெற்ற என்னால் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடிய வில்லை. எனவே எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி என்னை தேர்ச்சி பெற்ற வனாக அறிவிக்க வேண்டும்.
அதுவரை ஒரு ஆசிரியர் பணியி டத்தை நிரப்பாமல் காலியாக வைத்தி ருக்க உத்த ரவிட வேண்டும்” என்று கோரியி ருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன், இது தொடர் பாக அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வக்கீல்கள், ஆசிரி யர்கள், பொது மக்கள் ஆகியோரும்
இந்த பாடல் எந்த மொழியில் பாடப் பட்டது? என்பதற்கு ஆதாரங்களுடன், இந்த ஐகோர்ட்டுக்கு உதவலாம் என்றும் உத்தர விட்டார்.
இதை யடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அட்வகேட் ஜெனரல் முத்து குமாரசாமி ஆஜராகி,
வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப் பட்ட சமஸ்கிருத பாடல் என்று விளக்கம் அளித்தார்.
ஐகோர்ட்டு வக்கீல் கள் சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத் துரை ஆகியோர் இது சமஸ்கிருத பாடல் அல்ல. வங்க மொழியில் எழுதப் பட்ட பாடல் என்று ஆதாரங் களுடன் வாதிட் டார்கள்.
அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட றிந்த நீதிபதி முரளிதரன் இன்று காலை யில் தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் நீதிபதி கூறி யிருப்ப தாவது:-
வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது? என்பதற்கு விளக்கம் அளிக்கும் படி பொது மக்களு க்கும், வக்கீல் களுக்கும் இந்த ஐகோர்ட்டு கோரிக்கை விடுத்தது.
இதன் படி, வக்கீல் கள் சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத் துரை ஆகியோர் ஆஜராகி, வங்க மொழி யில் தான் பாடல் பாடப் பட்டது என்று ஆதாரங் களுடன் கூறி, வாதிட் டார்கள்.
அதில், வக்கீல் சுஜாதா, மேற்கு வங்கத் துக்கு நேரடி யாக சென்று, வந்தே மாதரம் பாடலை பாடிய பக்கிம் சந்திர சட்டோ பாத்தியா யாவின் உறவினர் களை தொடர்பு கொண்டு,
அவர்க ளிடம் இருந்து ஆவண ங்களை வாங்கி வந்து, இந்த ஐகோர்ட் டில் தாக்கல் செய் துள்ளார்.
அவர் தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப் படையில், வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில் எழுதப் பட்டது என்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இதற்காக வக்கீல் சுஜாதாவை இந்த ஐகோர்ட்டு பாராட்டு கிறது. வந்தே மாதரம் பாடல், 1882-ம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டோ பாத்தியாயா எழுதிய ஆனந்த மடம் என்ற நாவலில் முதலில் இடம் பெற்றது.
தேசபக்தி பாடலான இந்த பாடல், அந்த காலக் கட்டத்தில் மக்களி டையே விடுதலை உணர் வையும், தேச பக்தியையும் ஏற்படுத் தியது.
நாட்டின் விடுதலைக் காக பல தலை வர்கள் தங்களது வாழ்க் கையை அர்ப்பணித் துள்ளனர். அவர்க ளது தியாகம் இளைய தலை முறையி னருக்கு தெரிய வேண்டும்.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி யினால், இளைய சமுதாய த்தினர் நேரம் கிடைக் காமல், எந்நேரமும் பரபரப் புடன் சுற்றி வருகி ன்றனர்.
எனவே, நாட்டிற் காக ரத்தம் சிந்திய தலை வர்கள் குறித்தும், தேசப்பற்று குறித்தும் இளைய தலை முறையி னருக்கு எடுத்து ரைக்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு வழக்கில், திரையரங் குகளில் திரைப் படம் திரையிடு வதற்கு முன்பு தேசிய கீதம் பாடல் ஒலிப் பரப்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட் டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், பள்ளிப் பாடத்தில் திருக் குறளை கட்டாய மாக்க வேண்டும் என்று உத்தர விட் டுள்ளார்.
அதே போல, தேசபக்தி பாடலான வந்தே மாதரம் பாடலை, பள்ளி, கல் லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங் களில் வாரம் ஒருமுறை திங்கள்
அல்லது வெள்ளிக் கிழமை யில் கண்டிப் பாக ஒலிப்பர வேண்டும். மாண வர்கள் அந்த பாடலை பாட வேண்டும்.
அதே போல, அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற் சாலைகள் உள்ளிட்டவைகளில் மாதம் ஒரு முறை இந்த தேசபக்தி பாடலை பாட வேண்டும்.
இது தொடர்பாக சுற்றறிக்கையை தலைமை செயலாளர், 4 வாரத்துக்குள் பிறப்பித்து, அனைத்து தரப்பினருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் பாடப்பட்டுள்ள தால், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கப் பட வேண்டும்.
மேலும், இந்த ஒரு மதிப்பெண் வழங்கப் பட்டாலும், 0.17 மதிப்பெண் அவருக்கு குறை வாக இருப்ப தாகவும், அதனால் ஆசிரியர் பதவி வழங்கப் படாது என்று அரசு தரப்பில் கூறப் பட்டது. இதை ஏற்க முடியாது.
அந்த 0.17 மதிப் பெண்ணை மனுதார ருக்கு வழங்கி, அவர் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற வராக அறிவிக்க வேண்டும்.
இதன் பின்னர், 4 வாரத்து க்குள் மனு தாரருக்கு ஆசிரியர் பணியை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி முரளிதரன் உத்தர வில் கூறி யுள்ளார்.