குல்பூஷன் தாயாருக்கு விசா... சுஷ்மா கண்டனம் !

குல்பூஷன் ஜாதவின் தாயாருக்கு விசாகோரி வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாஜ் அஜீஸுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
குல்பூஷன் தாயாருக்கு விசா... சுஷ்மா கண்டனம் !
அக்கடிதத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலைக் கூட இதுவரை பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்காத நிலையில், பாக்.கின் இந்த போக்குக்கு சுஷ்மா கண்டனம் தெரிவித் துள்ளார்.

இது தொடர் பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா வில் மருத்துவ சேவை பெற விசா கோரி விண்ணப் பிக்கும் அனைத்து பாகிஸ்தானி யர்களுக் கும் விசா வழங்க நாங்கள் தயாரா கவே இருக் கிறோம்.

அதற்கு நாங்கள் எதிர் பார்ப்பது எல்லாம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் அங்கீகாரம் மட்டுமே. 

சம்பந்தப் பட்ட நபருக்கு விசா வழங்க பரிந்துரை ப்பதாக பாக் வெளியுறவு அமைச்சர் கூறி விட்டால் உடனடி யாக விசா வழங்கி விடுகிறோம்.
ஆனால், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷன் ஜாதவின் தாயார் அவந்திகா ஜாதவ் பாகிஸ்தான் விசா கோரியி ருந்ததை நான் பரிந்து ரைத்து கடிதம் எழுதியும் கூட பாகிஸ்தான் 

இதுவரை எவ்வித பதிலும் அளிக்க வில்லை. குறைந்த பட்ச மாக அந்தக் கடிதம் கிடைத் ததைக் கூட அங்கீக ரித்து ஒப்புதல் வழங்க வில்லை" எனக் குறிப்பிட் டுள்ளார்.

இந்திய கடற் படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். 

அவர் பாகிஸ்தானு க்கு எதிராக சதி செய்த தாகவும் கராச்சி குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்ப தாகவும் குற்றம் சாட்டப் பட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற த்தில் வழக்கு விசாரணை நடை பெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்ப ளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்ட னையை எதிர்த்து சர்வதேச நீதிமன் றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப் பட்டது.

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப் பட்ட மரண தண்ட னைக்கு இடைக் கால தடை விதித்து சர்வதேச நீதி மன்றம் தீர்ப்ப ளித்தது.

இந்நிலை யில், குல்பூஷன் ஜாதவின் தாயா ருக்கு விசா கோரி தான் எழுதிய கடிதத் துக்கு பாகிஸ்தான் பதில் அளிக்கா ததற்கு சுஷ்மா கண்டனம் தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings